Mutual Fund: மாதம் ரூ.2000 முதலீட்டை ரூ.3 கோடியாக பெருக்கும் டாப் அப் SIP ஃபார்முலா

Investment Tips: வாழ்க்கையில் நிதி நிலை மேம்பட சேமிப்பு மிக அவசியம். அதோடு சேமித்த பணத்தை, வருமானம் அள்ளித்தரும் சிறந்த திட்டங்களில் முதலீடு செய்வது அதைவிட முக்கியம். இதை செய்தால் கோடீஸ்வ கனவை எளிதில் அடையலாம்.

நாம் வாங்கும் சம்பளத்தில் குறைந்தபட்சம் 10% என்ற அளவிலான தொகையையாவது சேமிக்க வேண்டும். இவ்வாறு சேமித்த பணத்தை, பணத்தை பன்மடங்காக்கும் திட்டங்களில் ஒன்றான பரஸ்பர நிதியங்களில் SIP முறையில் முதலீடு செய்வதன் மூலம் ஆயிரங்களை எளிதில் கோடிகளாக பெருக்கலாம்.

1 /10

பங்குச்சந்தையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் உள்ளதால், முதலீட்டாளர்களுக்கு தற்போது SIP முதலீட்டை தொடங்குவதோ, தொடருவதோ பாதுகாப்பானது தானா என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஆனால் இவை நீண்ட கால முதலீட்டில் நல்ல லாபம் தரும் என்பதால், அச்சம் கொள்ள தேவையில்லை என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2 /10

பரஸ்பர நிதிய முதலீட்டில், நாம் முதலீடு செய்யும் பணம், யூனிட்களாக ஒதுக்கப்படுகிறது. எனவே, பங்கு சந்தை சரிவின் போது, உங்கள் பணத்திற்கு அதிக யூனிட்கள் கிடைக்கும். இதனால், ஏற்றத்தின் போது அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

3 /10

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பணம் பெருகுவதற்கான முக்கிய காரணம் இதில் கிடைக்கும் நல்ல வருமானமும், கூட்டு வட்டியின் பலனும் தான். அதோடு இளமையிலேயே முதலீட்டை தொடங்குவதால், ஓய்வு காலத்திற்கான நிதியை சிறப்பாக சேமிக்கலாம். 

4 /10

எஸ்ஐபியில் ரூ.2,000ல் முதலீடு செய்வதன் மூலம் ரூ.3 கோடி வரை எப்படிச் சேர்க்கலாம் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். ரூ.3 கோடி நிதியைச் சேர்க்க, 10/35/12 என்ற ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும்.   

5 /10

முதலீட்டிற்கான 10/35/12 என்ற ஃபார்முலாவில், முதலில் உள்ள10 என்றால் 10 சதவீத டாப்-அப். அதாவது, நீங்கள் ரூ.2000 என்ற அளவில் முதலீடு செய்யத் தொடங்கியதுடன், ஆண்டுதோறும் 10% டாப்-அப் செய்ய வேண்டும். அதாவது 10% என்ற அளவில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

6 /10

ஃபார்முலாவில் உள்ள 35 என்றால் 35 வருட எஸ்ஐபி தொடர் முதலீட்டை குறிக்கிறது. அடுத்ததாக வரும் 12 என்றால் 12% வருமானம். அதாவது, நீங்கள் ரூ.2,000 என்ற அளவில் SIP முதலீட்டைத் தொடங்கி, ஆண்டுதோறும் 10% டாப்-அப் செய்து, 35 ஆண்டுகளுக்கு SIP முதலீட்டை தொடர்ந்தால், அதில் 12% வருமானம் கிடைக்கும் நிலையில், 35 ஆண்டுகளில் ரூ.3 கோடிக்கு உரிமையாளராகிவிடுவீர்கள்.

7 /10

நீங்கள் 25 வயதில் 2,000 ரூபாயில் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த ஆண்டு முதல், அதில் 10% டாப்-அப் செய்யத் தொடங்க வேண்டும். ஒரு வருடத்திற்குப் பிறகு, ரூ. 200 என்ற அளவில் 10% அதிகரித்தால், முதலீட்டுத் தொகை மாதம் ரூ. 2,200 என்ற அளவில் இருக்கும் இந்த வழியில், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் SIP தொகையில் அப்போதைய தொகையில் 10% சேர்க்க வேண்டும்.

8 /10

நீங்கள் தொடர்ந்து 35 ஆண்டுகளில் மொத்தம் ரூ.65,04,585 முதலீடு செய்வீர்கள். இதன் மீதான வருவாயை 12% என்று பார்த்தால் உங்களுக்கு வட்டியில் இருந்து மட்டும் ரூ.2,50,25,068 கிடைக்கும். இதன் மூலம் உங்கள் மொத்த கார்பஸ் ரூ 3,15,29,653 ஆக இருக்கும்.

9 /10

நீண்ட கால SIP முதலீட்டின் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 12% ஆகக் கருதப்படுகிறது. எனவே இங்கே கணக்கீடு 12% சராசரி ஆண்டு வருவாயின் படி செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில பரஸ்பர நிதியங்கள் 16% முதல் 25% வரை கூட வருமானத்தை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

10 /10

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.