Weight Loss Tips: உடல் எடை அதிகமாக உள்ளதா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Belly Fat Reduction: நமது ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக நம் உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றது. அதுவும், தொப்பை கொழுப்பு அதிகரித்துவிட்டால், அதை குறைப்பது மிகவும் கடினம். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கடுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில காய்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
கீரை மற்றும் முட்டைக்கோஸ், லெட்யூஸ் போன்ற பிற இலை காய்கறிகள் தொப்பை கொழுப்பை எரிக்க சிறந்தவை. இவை உடல் எடையை வேகமாக குறைப்பதோடு இவற்றில் இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.
காளான் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை ஒழுங்குபடுத்தி எடை இழப்பு மற்றும் கொழுப்பு எரிப்பை ஊக்குவிக்கின்றன. காளானில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. ஆகையால் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். இதன் விளைவாக கொழுப்பு இழப்பு ஏற்படுகிறது.
ப்ரோக்கோலியில் உயர்தர நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது தவிர, உடலில் கொழுப்பு இழப்பை அதிகரிக்க உதவும் பைட்டோ கெமிக்கல்களிம் இதில் உள்ளன.
காலிஃப்ளவரிலும் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. காலிஃபிளவர் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது வேகமான எடை இழப்புக்கு மிகவும் உதவும்.
கொழுப்பை எரிக்க பச்சை மிளகாய் உதவியாக இருக்கும். மிளகாய் உட்கொள்வதால் உருவாகும் வெப்பம் அதிக கலோரிகளைப் பயன்படுத்த உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள கொழுப்பு அடுக்குகளை கரைக்கிறது.
குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பூசணிக்காய், உடல் பருமனை குறைக்க உதவும். கறி, ஸ்மூத்தி, கூட்டு என பல வகைகளில் இதை உட்கொள்ளலாம்.
கேரட் எடை இழப்பு டயட்டில் சேர்க்க வேண்டிய ஒரு காய். இதில் கலோரி அளவு மிக குறைவாக உள்ளது. கேரட்டில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகையால் ஆரோக்கியமான எடை இழப்புக்கு இது ஏற்றதாக கருதப்படுகின்றது.
பீன்ஸ் நீங்கள் உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான காய்களில் ஒன்று. பீன்ஸ் தொப்பை கொழுப்பு இழப்புக்கு மிகவும் சிறந்தது. அவை கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்தவை. பீன்ஸ் உட்கொள்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.
வெள்ளரிக்காய் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. இதில் அதிக நீர் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், அவை உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றன. இதனால் ஆரோக்கியமற்ற உணவுகளை அடிக்கடி உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை