மாதம் ரூ.1 லட்சம் வருமானம்! தினமும் 4-5 மணி நேர வேலைதான்..‘இந்த’ தொழில் பண்ணுங்க!

Business Idea Earn Rs 1 Lakh Per Month : இந்த தொழில் ஐடியாவை வைத்து, மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். அது எந்த தொழில் ஐடியா தெரியுமா?

Business Idea Earn Rs 1 Lakh Per Month : தொழில் தொடங்குவது என்பது எளிதான விஷயம் கிடையாது. தொழில் தொடங்கி வருமானம் ஈட்ட வேண்டும் என்றால், நாம் உடனடியாக எதையும் ஆரம்பித்து விட முடியாது. அதற்கென்று சிறந்த வியாபார உத்தி தேவைப்படும். மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கவும், குறைவான நேரத்தை தினமும் செலவிடவும் இங்கு ஒரு தொழில் ஐடியாவை பார்ப்போம்.

1 /7

குறைவான முதலீட்டில், அதிக வருமானம் கொடுக்கும் தொழிலை தொடங்க வேண்டும் என்கிற ஆசை அனைவருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட தொழில் ஒன்றை குறித்துதான் இங்கும் பார்க்க போகிறோம். சிறிய தொழிலாக இருந்தாலும், இது மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டி கொடுக்குமாம்.

2 /7

சூப் தொழில்தான், அந்த சிறுதொழில் ஆகும். இது, வருமானத்தை ஈட்டி தருவதோடு மட்டுமன்றி சமையலில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பவர்களுக்கு புது கதவையும் திறந்திருக்கிறது. சுவை, தரம் மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்துதான், இந்த தொழிலின் லாபத்தை கணிக்க முடியும். 

3 /7

முழுமையாக Pack செய்யப்பட்ட சூப், வீட்டு சுவையையும், இந்த மழைக்காலத்தில் தொண்டைக்கு இதமாகவும் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று சூப்பை டெலிவரி செய்வதும் வெற்றிகரமான தொழிலாக பார்க்கப்படுகிறது. 

4 /7

இதற்கு தேவைப்படுவது, நீங்கள் சரியான லொக்கேஷனை செட் செய்ய வேண்டியது. பிசியாக இருக்கும் மார்கெட், மருத்துவமனை, பிசியான தெருக்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் சூப் அதிகமாக விற்கப்படும். இதற்கு அருகில் ஒரு சிறிய இடம் பார்த்து சூப் தயாரித்தால் கூட, அதற்குறிய வாடகையை எளிமையாக கொடுத்து விடலாம். 

5 /7

சிறிய கிச்சனில் ஆரம்பித்து, வருமானம் அதிகரிக்கும் போதும், உங்களுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆரம்பித்த பிறகும் இந்த சூப் பிசினஸை பெரிதாக வளர்க்கலாம். 

6 /7

சூப் செய்ய, குறைவான பொருட்களே தேவைப்படும். ஒரு சூப் செய்ய ரூ.10 - 15 ஆகிறது என்றால், அதனை ரூ.35-40 வரை வைத்து விற்கலாம். ஆரம்பத்தில் அதிகமாக விலை வைத்து விற்காமல், குறைந்த விலையில் இருந்து ஆரம்பிக்கலாம். 

7 /7

மாதம், 2,000 கிண்ணம் வரை சூப் விற்கிறீர்கள் என்றால், சுலபமாக மாதத்திற்கு ரு.90,000 முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கு நீங்கள் தினமும் காலையில் 2-3 மணி நேரம், மாலையில் 2-3 மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது.