Ration Card : ரேஷன் கார்டு வைத்துள்ள திருச்சி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Ration Card : தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் பொருள் வீடு தேடி வரும் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
1/7
தாயுமானவர் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நவம்பர் 3 ஆம் தேதி, இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
2/7
அதேநேரத்தில் சில மாவட்டங்களில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வேறு தேதிகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் எந்த தேதிகளில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3/7
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 12.08.2025 அன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
4/7
இத்திட்டத்தின் வாயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 1,211 நியாய விலைக் கடைகளைச் சேர்ந்த 86,112 குடும்ப அட்டைகளில் உள்ள 1,03,855 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
5/7
அடுத்து வரும் 2025-ஆம் நவம்பர் மாதத்தில் 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் வயதுமுதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப் பொருட்களை விநியோகம் செய்திட அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
6/7
அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முதலமைச்சர் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமைப் பொருட்கள். 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
7/7
இந்த இரண்டு தினங்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களை அவர்களின் இல்லங்களிலேயே பெற்றுக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.