Tamil Ani month Palangal: ஆனி மாத பிறப்பில் சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆக்கியுள்ள நிலையில், மிதுன ராசியில் குரு பகவான் புதபகவான் மற்றும் சூரிய பகவான் இணைந்து, திரி கிரகி யோகம், குரு ஆதித்ய யோகம், புத ஆதித்ய யோகம் என்ற அரிய யோகங்கள் உருவாகியுள்ளது.
ஆனி மாதத்தில் மிதுனத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரிய யோகம், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கும் அதே வேளையில், சில ராசிகளுக்கு சுமாரான பலன்களை கொடுக்கக்கூடும். இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி: ஆனி மாதத்தில் சவால்கள் அதிகரிக்கும் என்றாலும், உங்கள் திறமையினாலும் கிரகங்களின் அனுகூல நிலைகளாலும், அனைத்தையும் சிறப்பாக சமாளிப்பீர்கள். வெற்றிகளுக்கும் பணவரவுக்கும் குறைவிருக்காது. தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது, நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும் சிறந்த பரிகாரம்.
ரிஷப ராசி: குரு பகவானின் அருளால் ஏற்படும் வாய்ப்பு இல்லை. எனும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதால், வருங்காலத்தில் ஏற்படும் விதி பிரச்சனைகளை எளிதாக சமாளிக்கலாம். விக்னங்களை நீக்கும் விநாயகர் வழிபாடு, கஷ்டங்களைப் போக்கும் சிறந்த பரிகாரம்.
மிதுன ராசி: உங்கள் தன்னம்பிக்கை சிறிது குறையக்கூடும். கோபத்தை கட்டுப்படுத்துவதும் நேர்மையாக இருப்பதும் முக்கியம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை அவசியம். அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு, சென்று வணங்குவது கஷ்டங்கள் நீங்க உதவும் சிறந்த பரிகாரம்.
கடக ராசி: உறவுகளில் இணக்கம் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். இதனால் நிதிநிலை மேம்படும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் கௌரவமும் அதிகரிக்கும். ராம பக்தரான பகவான் அனுமனை வழங்குவது, நற்பலன்கள் அதிகரிக்க உதவும் சிறந்த பரிகாரம்.
சிம்ம ராசி: வேலையில் தொழிலில் வெற்றிகள் குவியும். நேர்மறையான மாற்றங்கள், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். உங்கள் பேச்சு திறனும் நடவடிக்கையும் பிறரை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். பிரதோஷ வழிபாடு, காரிய சித்தியை கொடுக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
கன்னி ராசி: அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு, திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். பயணங்கள் சாதகமான முடிவுகளை தரும் உங்கள் உழைப்பு வீணாகாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொடர்ந்து விநாயகரை வழிபடுவதும், சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடிப்பதும் கஷ்டங்களைப் போக்கும், சிறந்த பரிகாரமாக இருக்கும்.
துலாம் ராசி: முதலீடு செய்ய நல்ல நேரம் இது. எனினும் நிதி பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் யோசித்து முடிவு எடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பெரிதும் பாதிப்பு ஏதும் இருக்காது என்றாலும், வயிற்று உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தினமும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது, காரிய தடைகளை நீக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
விருச்சிக ராசி: வாழ்க்கை சீராக இருக்கும். வேலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனினும் திடீர் முடிவுகளை எடுப்பதை தவிர்த்து, அனுபவம் மிக்க அவர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. நிதி நிலையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இருக்காது. துர்க்கை அம்மனின் ராகுகால வழிபாடு, எடுத்த காரியம் கைகூட உதவும் சிறந்த பரிகாரமாக இருக்கும்.
தனுசு ராசி: இதனால் வரை சந்தித்து வந்த பிரச்சனை முடிவடைந்து, சுமுகமான வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். கடன் பிரச்சனை தீர்ந்து, உங்கள் நிதிநிலைமை மேம்படும் காலம் வந்துவிட்டது. வேலையில் இதனால் வரை கிடைக்காத அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். வீட்டுக்கு அருகில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதி உள்ள கோயில்களுக்கு செல்வது, கஷ்டங்களை போக்கும் சிறந்த பரிகாரம்.
மகர ராசி: அலுவலகப் பணியில் இருப்பவர்கள், மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டை பெறுவார்கள். மாணவர்களின் கற்றல் திறனும், நினைவாற்றலும் சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயங்கள், வருமான உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். எனினும் உடல்நல பிரச்சனை குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வணங்குவது, நற்பலன்கள் அதிகம் கிடைக்க உதவும் சிறந்த பரிகாரம்.
கும்ப ராசி: நிதி பொறுப்புகள் அதிகரிப்பதால், உங்கள் தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். வீடு வாகனம் வாங்கும் முயற்சியில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்படக்கூடும். ஆடம்பர செலவுகளில் கட்டுப்பாடு இருந்தால், சொத்துக்களை எளிதாக வாங்கலாம். தினமும் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்வது, நினைத்தது கைகூட உதவும் சிறந்த பரிகாரம்.
மீன ராசி: வாழ்க்கையில் எதிர்பாராத சில சூழ்நிலைகளால் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் உடல்நல குறைவால் பாதிக்கப்படக்கூடும். இதனால் செலவுகள் அதிகரிக்கலாம். அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. திங்கள்கிழமை விரதம் இருப்பதும், சிவபெருமானை வணங்குவதும், கஷ்டங்கள் நீங்க உதவும் சிறந்த பரிகாரம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.