Trisha in Vijay Oath Ceremony: தமிழகத்தின் 13 வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவி இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் விஜயின் நெருங்கிய நண்பரான நடிகை திரிஷா கலந்து கொண்டுள்ளார். விஜயின் பதிவிற்கு விழாவில் முதல் வரிசையில் திரிஷாக்கு அமர இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Trisha in Vijay Oath Ceremony: நடிகை திரிஷா விஜயின் பதவியேற்பு விழாவுக்கு நீல நிற புடவையிலும் தலையில் மல்லிகை பூ வைத்து வருகை தந்துள்ளார். நாளைக்கு திரிஷாவின் புகைப்படம் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
1/5தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்று கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. 233 தொகுதிகள் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் விஜய் இடம் இல்லை. கடந்த நான்கு நாட்களாக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரி விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் நேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
2/5தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் தவெக தலைவர் விஜய் 120 ஆதரவு எம்எல்ஏ உடன் ஆட்சி அமைக்க இருக்கிறார். தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்க இருக்கிறார். பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த நேரு ஸ்டேடியத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தவெக தொண்டர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். விஜய்க்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
3/5விஜயுடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கின்றனர். அதன்படி, ஆனந்த், ஆதார் அர்ஜுனா, அருண் ராஜ், வெங்கட்ராமன், செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன், காரைக்குடி எம்எல்ஏ பிரபு, சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா ஆகியோர் முதற்கட்டமாக அமைச்சர்களாக பதவியேற்றி இருக்கின்றனர். இந்த பதவியேற்பு விழாவில் விஜயின் நெருங்கிய தோழியான நடிகை திரிஷா கலந்து கொண்டுள்ளார். விஜயின் பதவியேற்பு விழாவிற்காக திரிஷா மிகுந்த உற்சாகத்துடன் வீட்டிலிருந்து புறப்பட்டு கிளம்பி வந்தார்.
4/5நீல நிற சேலையில் தலையில் மல்லிகை பூ வைத்து திரிஷா பதிவேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். விஜயின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த முக்கியமான விழாவில் அவரின் நெருக்கமான தோழியான திருஷா கலந்து கொள்ளுகின்றது பேசும் பொருளாக மாறி உள்ளது. விஜய்யின் மனைவியான சங்கீதா கலந்து கொள்ளாமல் திரிஷா கலந்து கொண்டுள்ளது பல்வேறு விவாதத்தையும் கிளப்பியுள்ளது. திரிஷாவின் புகைப்படமும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5/5அதே நேரத்தில், நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவர் கிரிஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில், திமுக சார்பில் இதுவரை எந்த தலைவர்களும் கலந்து கொள்ளவில்லை. மேலும், முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின் ஆகியோரும் விஜய்யின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளல்லை என்பது குறிப்பிடத்தக்கது.