தொடை இடைப் பகுதியில் அரிப்பு, எரிச்சலா? 5 நிமிடத்தில் சரி செய்யும் இயற்கை வைத்தியம் முயற்சிச் செய்யுங்கள்!

Instant Relief From Thigh Itch: தொடை இடுக்கில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை, குறிப்பாக பெண்களில், அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக எடை அதிகம் உள்ளவர்களுக்கு இது அடிக்கடி உண்டாகும். இந்த தொற்று பெரும்பாலும் கோடை காலத்தில் தீவிரமாகும். வீட்டிலேயே சில எளிய முறைகள் மூலம் இதை கையாளலாம்.

Instant Relief From Thigh Itch: பெண்கள், குறிப்பாக எடை அதிகம் உள்ளவர்கள், தொடை இடை இடுக்கில் ஏற்படும் பாக்டீரியா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது தூக்கமின்றி வலியுடன் இரவுகளை கடத்தவைக்கும். வீட்டு வைத்திய முறைகள் மூலம் இந்த தொந்தரவை குறைக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

 

1 /9

கற்றாழை ஜெல்(Aloe vera gel): கற்றாழையின் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் அரிப்பை தணிக்க உதவும். பாதிக்கப்பட்ட பகுதியில் ஜெல்லை தேய்த்து நிம்மதியை பெறலாம்.

2 /9

தேங்காய் எண்ணெய்(Coconut oil): தோல் ஈரத்தன்மையை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும். சிறந்த பலனுக்கு மஞ்சளுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

3 /9

பேக்கிங் சோடா(Baking soda): பேக்கிங் சோடா பாக்டீரியாவை ஒழிக்க உதவுகிறது. சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பூசலாம்.

4 /9

நீரேற்றம்(Hydration): தொலை நீரேற்றம் இல்லாமல் இருந்தால் அரிப்பு ஏற்படலாம். தினமும் போதுமான தண்ணீர் குடித்து உடலை ஈரமாக வைத்திருங்கள்.

5 /9

சூடு-குளிர் ஒத்தடம்(Hot-cold compress): மஞ்சளும் சுடு தண்ணீரும் சேர்த்து பாதிப்பை கழுவி, பின் ஐஸ் பேக்கால் ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு குறையும்.

6 /9

காற்றோட்ட உடைகள்(Breathable clothes): வியர்வை மற்றும் மிச்ச ஈரப்பதம் அரிப்பைத் தூண்டும். காற்றோட்டம் உள்ள சீராகிய துணிகளை அணியுங்கள்.

7 /9

உப்பு தண்ணீர் கழுவல்(Salt water wash): சுடு நீரில் உப்பு கலந்து பாதிக்கப்பட்ட இடத்தை கழுவுவது தொற்றுகளை குறைக்க உதவும்.  

8 /9

பாதுகாப்பு வழிமுறைகள்(Safety instructions): இறுக்கமான ஆடைகள், பொது கழிப்பறை பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தூய்மையை பராமரித்தால் அரிப்பு தவிர்க்கலாம்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.