108 அம்மன் கோயில் டூர் செல்லலாம்.. குறைந்த கட்டணம், அசத்தும் TTDC

TTDC 5 Days 108 Aamman Temple Tour Plan: தமிழ்நாடு சுற்றுலாத் தற்போது 5 நாட்களில் 108 அம்மன் கோயில்களை தரிசிக்கும் புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

1 /8

தமிழ்நாடு சுற்றுலாத் துறை தற்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஈர்க்கும் வகையில் மேம்படுத்தி வருகிறது. இந்த சுற்று பயணம் ஆன்மிக சுற்றுலா பயணமாகும். இந்தியாவிலேயே அதிக கோயில்களை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ள நிலையில் தற்போது கோயில்களுக்கு செல்ல என பல வகையான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.  

2 /8

சென்னையிலிருந்து 3 நாட்கள் பயணமாக நவக்கிரக கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது. இதில் திங்களூர், திருநாகேஸ்வரம், சூரியனார் கோயில், கஞ்சனூர், வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, கீழப்பெரும்பள்ளம், திருநள்ளாறு, ஆலங்குடி ஆகிய கோயில்களை கொண்ட சுற்றுலாவாக அமைக்கப்பட்டுள்ளது.  

3 /8

இதனை அடுத்து ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலை மையமாகக் கொண்ட 3 நாட்கள் பயண சுற்றுலாவும் செயல்படுத்தப்படுகிறது. முருகனின் ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றை தரிசிக்கும் பயண சுற்றுலாவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.  

4 /8

தற்போது 5 நாட்களில் தமிழகத்தில் உள்ள 108 அம்மன் கோயிலை தரிசிக்கும் வகையில் சுற்றுலா திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை தொடங்கவுள்ளது.   

5 /8

முதல் நாள் இரவு சென்னையில் இருந்து புறப்படும். சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களை சுற்றி பார்ப்பீர்கள். பிறகு இரவு முதல் நாள் திருக்கடையூரில் உள்ள ஓட்டலில் தங்குவீர்கள்.  

6 /8

இதனை அடுத்து மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் வழியாக பல கோவில்களை தரிசனம் செய்த பிறகு அன்றைய தினம் இரண்டாவது நாள் தஞ்சாவூரில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

7 /8

அடுத்ததாக தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு பிறகு வது நாள் மதுரையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. பின்னர் மதுரை, திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்களை தரிசனம் செய்த பிறகு அன்றைய தினம் இரவு சென்னையை வந்து அடைவீர்கள்.   

8 /8

இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 11 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவு இணையதளம்: www.tamilnadutourism.tn.gov.in மற்றும் www.ttdconline.com தொடர்புக் கொள்ளலாம்.