TTDC Five Day Tour: மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 5 நாள்களுக்கு சுற்றுலா செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
TTDC Madurai Rameshwaram Kanniyakumari Tour: தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் 5 நாள் சுற்றுலா பிளானை தயார் செய்துள்ளது. இதுகுறித்து முழுமையான விவரங்களை இங்கு காணலாம்.
1/8தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு 5 நாள்கள் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.
2/8இந்த சுற்றுலா மதுரையில் தொடங்கி மதுரையில் நிறைவடையும். சென்னையில் இருந்தோ அல்லது வெளியூரில் இருந்தோ இந்த சுற்றுலாவில் செல்ல நினைப்பவர்கள் மதுரைக்கு வர வேண்டும்.
3/8முதல் நாள்: காலையில் மதுரை ஓட்டல் தமிழ்நாட்டில் இருந்து பேருந்து புறப்படும். அங்கிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு நேராக மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லலாம். அங்கு கோவிலில் தரிசனம் முடித்து திருப்பரங்குன்றண் சென்று, முருகன் கோவிலிலும் தரிசனம் முடித்து மீண்டும் ஓட்டல் திரும்பலாம். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு மதியம் திருமலை நாயக்கர் மஹால் செல்லலாம். அங்கு சுற்றுப்பார்த்துவிட்டு ஒளியும், ஒலியும் நிகழ்ச்சியையும் பார்க்கலாம். அதற்கு பின் காந்தி மியூசியம், அழகர் கோவில் சென்றுவிட்டு இரவில் ஓட்டல் திரும்பலாம். அங்கு இரவு உணவை முடித்துக்கொண்டு அங்கேயே தங்கலாம்.
4/82ஆம் நாள்: அடுத்த நாள் காலையில் விரைவாக காலை உணவை முடித்துவிட்டு வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் போகலாம். அதன்பின் கீழடி சென்று சுற்றிப்பார்த்துவிட்டு, தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்லலாம். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாட்டில் இரவு உணவை முடித்து அங்கேயே தங்கலாம்.
5/83ஆம் நாள்: ராமநாதசுவாமி கோவிலில் படிகலிங்க பூஜை மற்றும் அதிகாலை பூஜையை பார்க்க நினைப்பவர்கள் காலை 5.30 மணிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும். காலை 9.30 மணிக்கு காலை உணவை முடித்து ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்லலாம். தொடர்ந்து, குஷி கடற்கரையை பார்த்துவிட்டு மதிய உணவை சாப்பிடலாம். அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்படலாம். மாலையில் சூர்ய அஸ்தமனத்தை பார்த்துவிட்டு கன்னியாகுமரி ஓட்டல் தமிழ்நாட்டில் தங்கலாம். இரவு உணவும் அங்கேதான்.
6/84ஆம் நாள்: அதிகாலையிலே எழுந்து சூர்ய உதயத்தை காண செல்லலாம். காலை உணவை முடித்துக்கொண்டு விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். மதிய உணவை முடித்துவிட்டு திருப்பரப்பு அருவிக்குச் செல்லலாம். அங்கு குளித்துவிட்டு மாத்தூர் தொட்டிப்பாலம் செல்லலாம். அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு தாணுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கன்னியாகுமரி ஓட்டல் தமிழ்நாட்டுக்கு திரும்பலாம். இரவு உணவை முடித்து அங்கேயே தங்கலாம்.
7/85வது நாள்: காலை உணவை முடித்துவிட்டு ஸ்ரீபகவதி அம்மன் கோவிலுக்குச் செல்லலாம். அங்கு முடித்துவிட்டு, கன்னியாகுமரியில் உள்ள தென் திருப்பதி கோவிலுக்குச் செல்லலாம். அங்கு தரிசனம் முடித்துவிட்டு கன்னியாகுமரியில் மதிய உணவை முடித்துவிட்டு மதுரை நோக்கி புறப்படலாம். மாலை 6 மணிக்கு மதுரை ஓட்டல் தமிழ்நாட்டுக்கு சென்றடையலாம்.
8/8இந்த 8 சுற்றுலாவில் பேருந்து வசதி, சுற்றுலா வழிகாட்டி, உணவு வசதி, தங்குமிட வசதி ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்யும். இந்த சுற்றுலாவுக்கு பயணி ஒருவருக்கு ரூ.13,700 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. www.ttdc.com என்ற இணையத்தளம் மூலம் சுற்றுலாவுக்கு பதிவு செய்யலாம்.