சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் சுற்றுலாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதில் கிடைக்கும் சேவைகள், இதற்கான கட்டணம் குறித்து இங்கு காணலாம்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் பல்வேறு சுற்றுலா திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில், இந்த புதுச்சேரி சுற்றுலா திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
1/8சென்னையில் இருந்து ஒரு நாள் ஜாலியாக சுற்றுலா செல்ல வேண்டும் என நினைத்தீர்கள் என்றால், புதுச்சேரி உஙகளுக்கு சிறப்பான ஆப்ஷன் எனலாம்.
2/8உங்களிடம் காரோ, பைக்கோ இல்லையென்றால் தனியாக பேருந்தில்தான் செல்ல வேண்டும் என நினைத்தால், தமிழக அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் புதுச்சேரி சுற்றுலா திட்டத்தை தேர்வு செய்யலாம்.
3/8பிரஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியில் இன்னும் பிரஞ்சின் எச்சங்கள் அதிகம் இருக்கின்றன. கடற்கரைகள், தெருக்கள் அனைத்தும் வரலாற்று சுவடுகளை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
4/8தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த ஒரு நாள் சுற்றுலா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஆகும். பேருந்து வசதியும், புதுச்சேரியில் சுற்றுலா தலங்களுக்கும் அழைத்துச் செல்லும் வசதியும் செய்துகொடுக்கப்படும்.
5/8காலையில் 6.30 மணிக்கு சென்னை சுற்றுலாத்துறை அலுவலகத்தில் இருந்து பயணம் தொடங்கும். காலை 8.00 மணிக்கு மகாபலிபுரத்தில் காலை உணவு சாப்பிடலாம். அதன்பின் ஆரோவில்லிக்கு காலை 10.15 மணிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அதனை முடித்துக்கொண்டு மதியம் 12.15 மணிக்கு புதுச்சேரி அருங்காட்சியகம், மதியம் 12.50 மணிக்கு புதுச்சேரி கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
6/8தொடர்ந்து, மதியம் 1.30 மணிக்கு உணவு இடைவேளை. மதியம் 2 மணிக்கு அரபிந்தோ ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். மதியம் 3.30 மணிக்கு முதலியார் குப்பத்தில் படகு சவாரிக்குச் செல்லலாம். அதன்பின் சென்னைக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கெல்லாம் காலையில் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்துவிடப்படும்.
7/8இந்த சுற்றுலாவில் பயணிகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்படாது. அதாவது, உணவு பயணிகளின் பொறுப்புதான். இந்த மாதத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி, 17ஆம் தேதி, 31ஆம் தேதி ஆகிய தேதிகளில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
8/8www.ttdconline.com என்ற இணையத்தளம் வாயிலாகவும், 1800 4253 1111 என்ற இலவச தொடர்பு எண் வாயிலாகவும் பதிவு செய்யலாம். இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் ஒருவருக்கு ரூ.1850 ஆகும்.