TVK Cabinet Ministers Net Worth: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் முதற்கட்டமாக 9 பேர் இன்று பொறுப்பேற்றனர். அந்த வகையில், தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 9 அமைச்சர்களின் சொத்து விவரங்களை இங்கு காணலாம்.
TVK Government Cabinet: தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. விஜய் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்யும் நிலையில், அவர்களின் பலம் 107 ஆகவே இருந்தது, மெஜாரிட்டிக்கு 118 தேவைப்பட்டது. காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பின் தவெகவுக்கு ஆதரவளித்தது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுகிறது. விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகியோர் வெளியில் இருந்து ஆதரவு தருவதை தொடர்ந்து, 120 எம்எல்ஏக்களுடன் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றது. வரும் செவ்வாய் அன்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. அந்த வகையில், தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 9 அமைச்சர்களின் சொத்து விவரம், கடன் விவரம், கல்வித் தகுதி, குற்ற வழக்குகளின் விவரம் இதோ...
1/9என். ஆனந்த்: தவெகவின் பொதுச்செயலாளரான இவர் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். 8ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர் மீது மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளன. சொத்து மதிப்பு: ரூ.7.47 கோடி, கடன் விவரம்: 3.58 கோடி. இதில் விஜய், ஆனந்திற்கு ரூ.3 கோடி கடன் கொடுத்திருப்பதாக முதல்வர் விஜய் அவரின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
2/9ஆதவ் அர்ஜுனா: தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவின் தலைவரான இவர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற இவர் மீது ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.534 கோடியாகும். கடன் தொகை ரூ.26.26 கோடி. தமிழ்நாட்டில் தற்போதைய எம்எல்ஏக்களில் 3வது பணக்காரர் இவர் ஆவார். 2வது இடத்தில் விஜய் உள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், அதிமுகவைச் சேர்ந்த லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் முதலிடத்தில் உள்ளார்.
3/9அருண் ராஜ்: தவெகவின் கொள்கை பரப்பு மற்றும் பிரச்சாரப் பொதுச்செயலாளர் ஆவார். முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான இவர், வருமான வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றியவர். இவர் மீது கிரிமினல் வழக்கு ஏதுமில்லை. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவரது சொத்து மதிப்பு ரூ.12 கோடி ஆகும். கடன் விவரம் ரூ.1 கோடி.
4/9கே.ஏ. செங்கோட்டையன்: அதிமுகவின் முன்னாள் அமைச்சரான இவர், கடந்தாண்டு தவெகவில் இணைந்தார். தவெகவின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் மீது மூன்று கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டு வென்ற இவர் 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.15.72 கோடி. கடன் ரூ.59.48 லட்சம் ஆகும்.
5/9வெங்கட ரமணன்: தவெகவின் பொருளாளரான இவர் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை. முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்திருக்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.5.40 கோடியாகும். கடன் ரூ.25.50 லட்சம் ஆகும்.
6/9சி.டி.ஆர் நிர்மல்குமார்: தவெகவின் இணைப் பொதுச்செயலாளரான இவர் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். இவர் மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் உள்ளன. முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். இவரது சொத்து மதிப்பு ரூ.26 கோடியாகும். கடன் ஏதுமில்லை.
7/9ராஜ்மோகன்: தவெகவின் துணைப் பொதுச்செயலாளரான இவர் சென்னை எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கும் இவர் மீது எவ்வித குற்ற வழக்குகளும் இல்லை. சொத்து மதிப்பு ரூ.2 கோடி ஆகும். கடன் ரூ.30 லட்சம்.
8/9டி.கே. பிரபு: தவெகவின் சிவகங்கை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயலாளரான இவர் காரைக்குடி தொகுதியில் வெற்றிபெற்றார். மருத்துவரான இவர் மீதும் எவ்வித குற்ற வழக்குகளும் இல்லை. சொத்து மதிப்பு ரூ.11.39 கோடி. கடன் ரூ.3 கோடியாகும்.
9/9எஸ். கீர்த்தனா: தவெக சார்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தோற்கடித்தவர். முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர் மீது கிரிமினல் வழக்குகள் ஏதுமில்லை. இவரது சொத்து மதிப்பு ரூ.22 லட்சம், கடன் ரூ.12 லட்சம் ஆகும்.