காக்க வைக்கும் திருமா: விஜய்க்கு நல்ல செய்தி வருமா? இழுபறி தொடருமா?

Published: May 09, 2026, 03:30 PM IST|Updated: May 09, 2026, 03:37 PM IST

TVK Vijay Latest News: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கில் இன்னும் சில எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) முடிவு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

TVK Vijay Latest News: தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது குறித்த தனது அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இது இன்று மாலை 4 மணிக்கு வெளிவரவுள்ளது.

Tamil Nadu Politics1/8

அரசியல் கண்ணாமூச்சி

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக நடந்து வரும் அரசியல் கண்ணாமூச்சி மக்களின் பொறுமையை சோதிக்கத் தொடங்கியுள்ளது. முதல் முறையாக அரசியல் களத்தில் கால் பதித்து, சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முடியாமல் தத்தளிப்பது வினோதத்தின் உச்சமாக உள்ளது

CPI and CPM2/8

CPI மற்றும் CPM

இந்த நிலையில், ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணை எட்ட பல கட்சிகள் தவெக -விற்கு ஆதரவு அளித்துள்ளன. முதலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தவெக -விற்கு தனது ஆதரவை அளித்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM) ஆகிய கட்சிகளும் தற்போது தங்கள் ஆதரவை உறுதிபடுத்தியுள்ளன. 

Tamilaga Vettri Kazhagam3/8

தமிழக வெற்றிக் கழகம்

இந்த நிலையில், மொத்த எண்ணிகையின் தொகுப்பு இப்படி உள்ளது: த.வெ.க (TVK): 108 இடங்கள், காங்கிரஸ்: 5 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் (CPI): 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPM): 2 இடங்கள். மொத்தம் தேவைப்படும் எம்.எல்.ஏ -க்கள் என்ற நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவெக குழப்பத்தில் உள்ளது.

VCK4/8

விசிக

திமுக உடன் கூட்டணியில் இருக்கும் விசிக 2 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தெவெக -விற்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் CPI மற்றும் CPM -இன் நிலைப்பாட்டைத் தழுவி தங்களது நிலைப்பாடும் இருக்கும் என்று விசிக தெரிவித்திருந்தது. அந்த 2 கட்சிகளும் தவெக -விற்கு தங்கல் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்ட நிலையில், விசிக -வும் அதையே செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது.

Thol. Thirumavalavan5/8

தொல். திருமாவளவன்

இருப்பினும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் விசிக -வை காக்க வைத்துக்கொண்டிருக்கிறார். தவெக, விசிக கட்சி நிர்வாகிகள் இடையெ பல கட்ட பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. விசிக தரப்பில் பல கோரிக்கைகளும், நிபந்தனைகளும் முன்வைகப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tamilaga Vettri Kazhagam6/8

தமிழக வெற்றிக் கழகம்

தொல் திருமாவளவன் விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் தவெக -விற்கு சாதகமான நன்மைகளையும், பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம். விசிக, தவெக -விற்கு ஆதரவு அளித்தால் திருமாவளவன் போன்ற மூத்த அரசியல்வாதியின் அனுபவத்தையும், அறிவாற்றலையும், தவெக பயன்படுத்திக்கொள்ளலாம்.

VCK7/8

விசிக

ஆனால், விசிக இந்த முடிவை உடனடியாக எடுக்க தயாராக இல்லை என்பதும் தற்போது தெளிவாகத் தெரிகின்றது. தவெக தொடர்பான நிலைப்பாட்டை எடுக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரமே இதை காட்டுகின்றது. இந்த முடிவை ‘எடுத்தோம், கவிழ்த்தோம்’ என எடுக்க முடியாது என்றும் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

VCK Press Meet8/8

விசிக செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையில், இன்று மாலை 4 மணிக்கு விசிக செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் விசிக -வின் முடிவு எப்போது வெளிவரும் என்ற செய்தியும் கிடைக்கலாம், அல்லது, தனது நிலைப்பாட்டையும் விசிக வெளிப்படுத்தலாம். மொத்தத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் அந்த ஒரு வார்த்தைக்காக நாடே காத்திருக்கின்றது.