பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி! அரசின் சூப்பர் திட்டம்-யாரெல்லாம் வாங்கலாம்?

Written ByYuvashree
Published: Nov 30, 2025, 03:24 PM IST|Updated: Nov 30, 2025, 03:24 PM IST

Udyogini Yojana 2025 Scheme For Women : பெண்கள் பலருக்கு, சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்கிற திட்டம் இருக்கும். ஆனால், பல சமயங்களில் அதற்கான நிதி இல்லாததால் அந்த தொழிலை தொடங்க முடியாமல் போய் விடும். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான், மத்திய அரசின் உத்யோகினி யோஜனா திட்டம். 

Udyogini Yojana 2025 Scheme For Women : இந்த உத்யோகினி திட்டத்தை தொடங்குவதற்கு, பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்படுத்தீருக்கிறது. இதன் முழு நோக்கமே, பெண் தொழில் முனைவோர்களுக்கு சரியான நிதி உதவி வழங்க வேண்டும் என்பதுதான். இதற்கு யாருக்கு, என்ன தகுதி வேண்டும் என்பது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Udyogini Yojana1/7

உத்யோகினி யோஜ்னா

உத்யோகினி யோஜனா திட்டம், பெண் தொழில் முனைவோர்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட திட்டமாகும். குறைந்த வட்டி விகிதத்தில், பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன் கொடுப்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

First Launched2/7

முதலில் தொடங்கப்பட்டது

இந்த திட்டம் முதலில் கர்நாடக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு, பிற மாநிலங்களும் மத்திய அரசும் இதனை ஆரம்பித்தது. இதன் கிழ் பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரை கடன் தொகை பெற முடியும். 

Loan3/7

கடன்

இந்த கடன் தொகையை பெற, அவர்கள் கேரண்டி எதுவும் கொடுக்க தேவையில்லை. இதனை வைத்து அழகு நிலையில், துணிக்கடை, துணி தைக்கும் தொழில் உள்பட பல சிறு தொழில்களை தொடங்கலாம். 

Eligibility4/7

தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள், 18ல் இருந்து 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் இந்த கடனால் உதவி பெற்றவர்களாக இருக்க கூடாது. இவர்களின் வருட வருமானம், ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த வருமானம் பொருந்தாது. அவர்கள் நேரடியாக இதற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். 

விண்ணப்பிது எப்படி5/7

How to apply

அருகில் இருக்கும் வங்கி, அல்லது ஆன்லைன் விண்ணப்பம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். myscheme.gov.in portal என்கிற லிங்கில் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

Documents6/7

ஆவணங்கள்

இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தொழிலின் விவரமான திட்டம், சாதி சான்றிதழ் (தேவைப்பட்டால்), ஏதேனும் தொழில் ரீதியான அனுபவ சான்றிதழ் (தேவைப்பட்டால்)

Benefits7/7

பலன்கள்

இது, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கும், ஏழை எளிய பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.