அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: ஏப்ரல் 1 முதல் UPS... 50% ஓய்வூதியம், கிராஜுவிட்டி, இன்னும் பல நன்மைகள்

Unified Pension Scheme: மத்திய அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. ஏப்ரல் 1 முதல் இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரவுள்ளது. அதன் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.

Unified Pensin Scheme: புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விளக்கும் விரிவான வரைவை PFRDA சமீபத்தில் வெளியிட்டது. இருப்பினும், பலருக்கு இது குறித்து இன்னும் பல கேள்விகள் உள்ளன. அவற்றுக்கான விடை இந்த பதிவில் கிடைக்கும்.

1 /13

தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியத்தை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இருப்பினும், UPS-க்கு மாற விரும்பாதவர்கள் NPS திட்டத்திலேயே தொடரலாம் என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

2 /13

அதாவது மத்திய அரசு ஊழியர்கள் NPS அல்லது UPS இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்யும் விருப்பத்தைப் பெறுவார்கள். இந்தத் திட்டம் ஏற்கனவே NPS-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த புதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1, 2025 முதல் தொடங்க உள்ளது.

3 /13

பல தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரக் கோரி வந்தனர். இதைக் கருத்தில் கொண்டு, NPS மற்றும் OPS இரண்டின் சில சிறப்பு அம்சங்களையும் இணைத்து இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

4 /13

NPS முறையில் பங்குகள் மற்றும் கடன் முதலீடுகள் மூலம், அரசு ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டமான OPS -இல், ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

5 /13

தற்போதுள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) பதிலாக UPS கொண்டு வரப்படுகிறதா என்றும், சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு மற்றும் ஊழியர் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது உண்மையா என்றும் சமீபத்தில் அரசாங்கத்திடம் கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதி தாக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த பட்ஜெட்டைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் தேசிய ஓய்வூதிய முறையை (NPS) மாற்றியமைக்க நிதிச் செயலாளரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

6 /13

தேசிய கவுன்சிலின் ஊழியர்கள் தரப்பு மற்றும் மாநில அரசு உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் குழு விரிவான கலந்துரையாடல்களை நடத்தியதாக அமைச்சர் கூறினார். குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அமைச்சரவை 24.08.2024 அன்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) ஒப்புதல் அளித்தது. யுபிஎஸ் 01.04.2025 முதல் செயல்படுத்தப்படும் என்று 24.01.2025 அன்று அறிவிக்கப்பட்டது.

7 /13

ஓய்வுக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு சிறந்த நிதிப் பாதுகாப்பை வழங்குவதே UPS இன் நோக்கமாகும். யுபிஎஸ் -இன் சில முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.

8 /13

UPS இன் கீழ், ஓய்வூதியம் பெறுவோர், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்திருந்தால், தங்கள் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% (ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடைசி 12 மாதங்களிலிருந்து) ஓய்வூதியமாகப் பெறுவார்கள் . குறைந்த சேவை காலம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்) உள்ளவர்களுக்கு விகிதாசார ஓய்வூதியம் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு விகிதாசார ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள்.

9 /13

இந்தத் திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஊழியர் இறந்துவிட்டால், அதன் பிறகு அவர் முன்பு பெற்று வந்த ஓய்வூதியத் தொகையில் 60% ஐ அவரது மனைவி / கணவருக்கு வழங்குவதற்கான ஏற்பாடு உள்ளது.

10 /13

குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 -க்கு யுபிஎஸ் உத்தரவாதம் அளிக்கிறது. அதாவது, நீங்கள் மத்திய அரசின் கீழ் பணிபுரிந்து பத்து வருட சேவையை முடித்திருந்தால், ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள்.

11 /13

சேவை செய்யும் ஊழியர்களுக்கான அகவிலை நிவாரணம் (Dearness Relief) போலவே, ஓய்வூதியத் தொகையும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPIN-IW) அடிப்படையில் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு சரிசெய்யப்படும். அதாவது பணவீக்க அதிகரிப்புக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கப்படும்.

12 /13

ஓய்வு பெறும்போது, ​​ஊழியர்கள் தங்கள் பணிக்கொடையுடன் கூடுதலாக ஒரு மொத்தத் தொகையைப் பெறுவார்கள். இந்தத் தொகை ஒவ்வொரு ஆறு மாத சேவைக்கும் அவர்களது கடைசி மாதச் சம்பளத்தில் (அடிப்படை சம்பளம் + டிஏ) 1/10 பங்காக இருக்கும். இந்த சலுகை உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் தொகையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

13 /13

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு உங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அரசாங்க தளத்தை பார்க்க அறிவுறுத்தப்படுகின்றது.