Cabinet Clears 100 Percent FDI In Insurance : காப்பீட்டுத்துறையில் புதிய மாற்றத்தை மத்திய அமைச்சரவை கொண்டு வந்துள்ளது. இது, காப்பீட்டுதுறையை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Cabinet Clears 100 Percent FDI In Insurance :காப்பீட்டுத்துறையில், அன்னிய நேர முதலீட்டு வரம்பினை (FDI) 74% இருந்து, 100%ஆக உயர்த்துவதாக, நிர்மலா சீதாராமன் முன்னர் அறிவித்திருந்தார். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவை குழு, ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தினை, இங்கு பார்ப்போம்.
காப்பீட்டுத்துறைக்கான FDI வரம்பானது, 100 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனவும், ஆனால் இந்தியாவிற்குள் முழு பிரீமியத்தையும் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பின் போது தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டு முதலீட்டினை நிர்வகிக்கும் தற்போதைய பாதுகாப்பு மற்றும் நிபந்தனைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு எளிமைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இன்சூரன்ஸ் துறையில் கொண்டு வரப்பட்ட இந்த சீர்திருத்தமானது, நாட்டுக்குள் பல்வேறு வெளிநாட்டு மூலதனத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், வெள்ளிக்கிழமையான இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில், காப்பீட்டு நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 100 சதவீதமாக உயர்த்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் டிசம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வரும் குளிர்கால கூட்டத்தொடரில், அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100%ஆக உயர்த்துவது குறித்தான மசோதா நிறைவேற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டுத்துறையின் பயன்பாட்டை அதிகப்படுத்த, வளர்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டை அதிகரிக்கவும் வரவிருக்கும் நாடாளுமன்ர கூட்டத்தொடரில், இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்படலாம்.
இதுவரை, காப்பீட்டுத்துறை FDI மூலம், ரூ.82,000 கோடியை ஈர்த்திருக்கிறதாம். காப்பீட்டுத்துறையில், அந்நிய நேரடி முதலீட்டை 100% உயர்த்துவதால், செலுத்தப்பட்ட மூலதனத்தை குறைக்க முடியும். அதே போல, 1938ன் காப்பீட்டு சட்டத்தின் பல்வேறு திருத்தங்களை நிறைவேற்றவும் நிதி அமைச்சகம் முன்வந்துள்ளது.
மத்திய அமைச்சகத்தின் இந்த புதிய முடிவு, காப்பீட்டு சந்தையில், வாடிக்கையாளர்கள் சேவைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அடுத்தடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.