சச்சின் படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆகும் 4 சூப்பர் ஹிட் படங்கள்! என்னென்ன தெரியுமா?

Written ByYuvashreeUpdated byYuvashree
Published: Apr 27, 2025, 10:36 AM IST|Updated: Apr 27, 2025, 10:36 AM IST

Upcoming Tamil Re Release Films After Sachein :சமீபத்தில் வெளியான சச்சின் படம், பெரிய ஹிட் அடித்துள்ளதை தொடர்ந்து, வேறு சில தமிழ் திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

சச்சின் ரீ ரிலீஸ்1/7

விஜய் நடிப்பில் 2005ல் வெளியான சச்சின் திரைப்படம், சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ரீ-ரிலீஸ் ஆனது. ஒரிஜினல் வெளியீட்டின் போது படம் ஹிட் ஆனதோ இல்லையோ, ஆனால் ரீ-ரிலீஸில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்டில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார்.

கில்லி ரீ ரிலீஸ்2/7

சச்சின் படத்திற்கு முன்னர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படம் கில்லி. கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் ஆன இந்த படம், ரீ-ரிலீஸில் பல கோடிகளை வசூலித்தது. தொடர்ந்து இந்த ஆண்டும் சச்சின் மறுவெளியீடு ஹிட் ஆனதை தொடர்ந்து, இந்த படம் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

சச்சின்3/7

சச்சின் படத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு, இயக்குநர் ஜான் மகேந்திரன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடன இயக்குநர் ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.தாணு, சச்சின் படத்தை தொடர்ந்து தான் ரீ-ரிலீஸ் செய்ய இருக்கும் சில படங்கள் குறித்து பேசினார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்4/7

சச்சினை தொடர்ந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக எஸ்.தாணு கூறினார். அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், மம்மூட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை மறு வெளியீடு செய்வது குறித்து அப்படத்தின் இயக்குநர் ராஜீவ் மேனனிடம் பேசியதாகவும், இதன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருவதாகவும் கூறினார். 

கபாலி5/7

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம், கபாலி. இந்த படத்தின் ரீ-ரிலீஸ் குறித்து பேசிய எஸ்.தாணு, இதை 2026ஆம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

தெறி6/7

விஜய்யை வைத்து அட்லீ இயக்கிய ஹிட் திரைப்படங்களுள் ஒன்று தெறி. இந்த படத்தையும் 2026ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

காக்க காக்க7/7

சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் குறித்தும் தன்னிடம் பலர் கேட்டிருப்பதாகவும், இது குறித்து கௌதம் வாசுதேவ் மேனனிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் இந்த படம் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.