ஏப்ரல் 1 முதல் UPS: புதிய முறையில் ஓய்வூதியம் அதிகரிக்குமா? முழுமையான ஓய்வூதிய கணக்கீடு இதோ

UPS Latest News: ஏப்ரல் 1, 2025 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும். இதன் முக்கிய அமசங்கள் என்ன? இதில் கிடைக்கும் கூடுதல் பலன்கள் என்ன? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் OPS போன்ற உறுதியான ஓய்வூதியத்தை வழங்கும். மேலும் மத்திய அரசு ஊழியர்கள் NPS இல் செய்வது போல தங்கள் தொகையை பங்குகளில் முதலீடு செய்யலாம். UPS இன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் சராசரியாக ரூ.1,00,000 12 மாத அடிப்படை ஊதியமும் 25 ஆண்டுகள் சேவை காலமும் உள்ள ஒரு ஊழியருக்கு குறைந்தபட்ச உறுதியான மாதாந்திர ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

1 /14

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இது அடுத்த மாதம், அதாவது ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) ஆகியவற்றின் கலவையாக பார்க்கப்படுகின்றது.

2 /14

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் OPS போன்ற உறுதியான ஓய்வூதியத்தை வழங்கும். மேலும் மத்திய அரசு ஊழியர்கள் NPS இல் செய்வது போல தங்கள் தொகையை பங்குகளில் முதலீடு செய்யலாம். UPS 10 வருட சேவையை முடித்தவுடன் ரூ.10,000 குறைந்தபட்ச உறுதியான ஓய்வூதியத்தை வழங்குகிறது.

3 /14

UPS NPS ஐ மாற்றுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. NPS 2004 இல் தொடங்கப்பட்டது. தற்போது புதிதாக வந்துள்ள UPS அதற்கு மாற்றாக இருக்காது. இரண்டில் எதை வேண்டுமானாலும் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கலாம். மத்திய அரசு ஊழியர்கள் தானாக முன்வந்து NPS இலிருந்து UPS க்கு மாற முடியும். ஆனால் அத்தகைய மாற்றம் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும்.

4 /14

UPS இல் பணியாளர் / நிறுவனத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? UPS கணக்கில் மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்பு 10 சதவீதமாகவும், நிறுவனத்தின் (அரசு) பங்களிப்பு 18.5 சதவீதமாகவும் இருக்கும். அரசாங்கத்தின் 18.5 சதவீத பங்களிப்பில், 8.5 சதவீதம் மொத்த அடிப்படையில் பூல் கார்பஸுக்குச் செல்லும். கூடுதல் பங்களிப்பு UPS விருப்பத்தின் கீழ் பணியாளரின் உறுதி செய்யப்பட்ட கொடுப்பனவுகளை ஆதரிக்கும்.

5 /14

ஊழியரின் மற்றும் அரசாங்கத்தின் 10 சதவீத பங்களிப்புகள் பணியாளரின் தனிப்பட்ட கார்பஸுக்கு வரவு வைக்கப்படும், இது ஒரு பங்கு-இணைக்கப்பட்ட திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.

6 /14

குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் என்றால் என்ன? ஊழியர் மற்றும் அரசாங்கத்தின் 10 சதவீத பங்களிப்பு சந்தை-இணைக்கப்பட்ட திட்டத்தில் முதலீடு செய்யப்படும். அந்த நிலையில், ஊழியர் ஓய்வு பெறும் நேரத்தில் சந்தையில் இறக்கம் ஏற்பட்டால், பணியாளருக்கு உத்தரவாத வரம்பை விட குறைவான ஓய்வூதியம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால், ஊழியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்வதற்காக மீதமுள்ள தொகையை அரசாங்கம் ஈடுசெய்யும்.

7 /14

குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவை காலம் உள்ள ஒரு ஊழியருக்கு, ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீத தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். சராசரியாக ரூ.1,00,000 12 மாத அடிப்படை ஊதியமும் 25 ஆண்டுகள் சேவை காலமும் உள்ள ஒரு ஊழியருக்கு குறைந்தபட்ச உறுதியான மாதாந்திர ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி இங்கே காணலாம்.

8 /14

ஓய்வூதியம் பெறக்கூடிய சேவைகாலம் 25 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் என்ன செய்வது? அந்த நிலையில், பணியாளர் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை முழுமையாகப் பெற முடியாது. இது சேவை ஆண்டுகளின் விகிதாசார அடிப்படையில் வழங்கப்படும்.

9 /14

உதாரணமாக, சேவை 20 ஆண்டுகள் என்றால், குறைந்தபட்ச ஓய்வூதியம் சராசரி அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதமாக இருக்கும். 22 ஆண்டுகள் சேவை காலம் இருந்தால், குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம் சராசரி அடிப்படை ஊதியத்தில் 44 சதவீதமாக இருக்கும்.

10 /14

பணியாளர் அடிப்படை ஊதியத்தில் 50% க்கும் அதிகமான ஓய்வூதியத்தைப் பெற முடியுமா? ஊழியர்களின் சந்தையுடன் இணைக்கப்பட்ட UPS முதலீடுகள் சிறப்பாகச் செயல்பட்டு, ஒரு ஊழியர் ஓய்வு பெறும் நேரத்தில் சந்தை போக்கு நல்ல நிலையில், அதாவது வழக்கத்தை விட அதிகமாக இருந்தால், அவர்கள் தங்கள் 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை விட அதிக ஓய்வூதியத்தைப் பெறலாம்.

11 /14

UPS கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தைத் தவிர வேறு ஏதேனும் தொகை கிடைக்குமா? அவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்துடன் அகவிலை நிவாரணமும் (DR) கிடைக்கும். அகவிலைப் நிவாரணம் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (தொழில்துறை தொழிலாளர்கள்) படி கணக்கிடப்படுகிறது.

12 /14

பணி ஓய்வு நேரத்தில், UPS கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு மொத்தத் தொகையும் கிடைக்கும். இது தகுதிவாய்ந்த சேவையின் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மாதாந்திர ஊதியத்தில் 10 சதவீதத்திற்கு (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) சமமாக இருக்கும். மொத்தத் தொகை = (மொத்த ஊதியத்தில் 1/10)XL. (L என்பது ஒரு தனிநபரின் ஓய்வூதிய நிதியில் பங்களிப்பு செய்வதற்கான மாதங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆறு மாத நிறைவு செய்யப்பட்ட சேவை ஆண்டுகளின் எண்ணிக்கை)

13 /14

ரூ.1 லட்சம் அடிப்படை ஊதியம் மற்றும் 25 ஆண்டுகள் சேவையில் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் என்னவாக இருக்கும்? கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளம் ரூ.1,00,000 ஆகவும், ஓய்வூதியம் பெறக்கூடிய சேவை ஆண்டுகள் 25 ஆகவும், DR விகிதம் 53 சதவீதமாகவும் இருந்தால், மதிப்பிடப்பட்ட மொத்த மாதாந்திர ஓய்வூதியம் ரூ.76,500 ஆக இருக்கும். ஓய்வு பெறும்போது அவர்கள் பெறும் மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகை ரூ.7,65,000 ஆக இருக்கும்.

14 /14

UPS ஓய்வூதியதாரர் இறந்தால், குடும்பத்திற்கு அவர்களின் ஓய்வூதியத்தில் 60 சதவீதத் தொகை கிடைக்கும். ஆகையால், இந்த விஷயத்தில், மதிப்பிடப்பட்ட மாதாந்திர ஓய்வூதியம் (DR உட்பட) ரூ.45,900 ஆக இருக்கும். மதிப்பிடப்பட்ட மொத்தத் தொகை ரூ.7,65,000 ஆக அப்படியே இருக்கும்.