Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகமாக உள்ளதா? எளிய வழிகளில் அதை கட்டுப்படுத்தலாம். இதில் உதவும் உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Uric Acid Control: அதிக யூரிக் அமிலப் பிரச்சினை இப்போதெல்லாம் அதிகரித்து வருகிறது. வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனக்குறைவு காரணமாக, மக்கள் பெரும்பாலும் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள். யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால், அதிக புரத உணவுகளை உட்கொள்ளலாமா? ஊட்டச்சத்து நிபுணர் கூறுவதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
யூரிக் அமில அளவு அதிகமாக இருக்கும்போது புரத உட்கொள்ளலைத் தவிர்க்க வேண்டும் என்று மக்கள் பொதுவாக நினைக்கிறார்கள். இருப்பினும், இது உண்மையல்ல. உடலில் யூரிக் அமிலம் அதிகமானால், புரதத்தை தவிர்க்க வேண்டாம், மாறாக, பியூரின் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் லிமா மகாஜன், உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால், அனைத்து புரதங்களையும் கைவிட வேண்டியதில்லை என்றும் என்ன சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.
யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள், சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை அகற்ற உதவும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது உடலில் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைச் செய்ய நாளின் துவக்கத்தில் நெல்லிக்காய் அல்லது ஆரஞ்சு சாப்பிடலாம்
பச்சை பப்பாளியில் உள்ள பப்பேன் என்ற நொதி செரிமானத்திற்கு உதவுகிறது. இது வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. இதை சரியான மற்றும் குறைந்த அளவுகளில் உட்கொள்வது மூட்டு வலியில் நிவாரணத்தை அளிக்கும்.
இலவங்கப்பட்டை இன்சுலின் எதிர்ப்பு மற்றும் அதிகரித்த யூரிக் அமில அளவுகளுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்ற சிக்கல்களைக் கட்டுப்படுத்த உதவும். காலையில் வெதுவெதுப்பான நீரில் சிறிய துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இவற்றில் யூரிக் அமிலம் உருவாவதைக் குறைக்க உதவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. காலை அல்லது மதியம் இவற்றில் 1-2 கப் பிளாக் காபி அல்லது கிரீன் டீ குடிக்கலாம்.
என்ன சாப்பிட வேண்டும்? யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள், டோஃபு, முட்டை, தயிர் மற்றும் நட்ஸ்களை சாப்பிடுவது நன்மை பயக்கும். முழு தானியங்கள், வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் தயிர் மற்றும் டோன்ட் பால் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களையும் உட்கொள்ளலாம். செர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரிகளில் யூரிக் அமிலம் மற்றும் மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவும் சேர்மங்கள் உள்ளன.
பருப்பு, காளான் மற்றும் பட்டாணி ஆகியவற்றை மிதமாக உட்கொள்ளலாம். யூரிக் அமிலம் அதிகமானால், அனைத்து உணவுகளையும் விட்டிவிட வேண்டிய அவசியம் இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, சரியான நேரத்தில் சாப்பிடுவது மற்றும் ஆரோக்கியமான பழக்கஙளை கடைபிடிப்பது ஆகியவை முக்கியம். மேலும், பீர், விஸ்கி மற்றும் அதிக இனிப்புள்ள குளிர்பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட சிற்றுண்டிகள், பேஸ்ட்ரிகள் மற்றும் அதிக இனிப்பு உணவுகள், சிவப்பு இறைச்சி, கல்லீரல் மற்றும் இறால் போன்ற உறுப்பு இறைச்சிகளைத் தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.