ஆஸ்திரேலியா தொடரில் விளையாடும் வைபவ் சூர்யவன்ஷி? பிசிசிஐ திட்டம்!

Published: Aug 02, 2025, 02:38 PM IST|Updated: Aug 02, 2025, 02:38 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் இளம் இந்திய U19 அணி படை! கேப்டன் ஆயுஷ் மத்ரே தலைமையில் விளையாடும் வைபவ் சூர்யவன்ஷி! முழு விவரம்!

ஆஸ்திரேலியா1/6

ஆஸ்திரேலியா

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய U-19 கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் வெற்றிகரமாக சுற்றுப்பயணம் முடித்த ஆயுஷ் மத்ரே தலைமையிலான இளம் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஆயுஷ் மத்ரே2/6

ஆயுஷ் மத்ரே

ஆயுஷ் மத்ரே இந்த ஆஸ்திரேலிய தொடரிலும் இந்திய U-19 அணியின் கேப்டனாகத் தொடர உள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், டெஸ்ட் தொடரில் 340 ரன்கள் குவித்து அணியின் டாப் ஸ்கோரராக ஜொலித்த இவரது தலைமை பண்பு மற்றும் பேட்டிங் திறமைக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

வைபவ் சூர்யவன்ஷி3/6

வைபவ் சூர்யவன்ஷி

இந்த அணியில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், அதிவேக சதம் உட்பட 355 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக வலம் வந்த இவர், ஆஸ்திரேலிய ஆடுகளங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் போட்டி4/6

ஒருநாள் போட்டி

இந்த சுற்றுப்பயணம் செப்டம்பர் 21 ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள இயன் ஹீலி ஓவல் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியுடன் தொடங்குகிறது. செப்டம்பர் 21, 24, மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிரிஸ்பேனில் ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.

டெஸ்ட் 5/6

டெஸ்ட்

முதல் டெஸ்ட் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3 வரை பிரிஸ்பேனிலும், இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 7 முதல் 10 வரை மெக்கே மைதானத்திலும் நடைபெறும். இங்கிலாந்து தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட பல வீரர்களை உள்ளடக்கிய ஒரு வலுவான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

அணி விவரம்6/6

அணி விவரம்

அணி விவரம்: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, வேதாந்த் திரிவேதி, ராகுல் குமார், அபிக்யான் குந்து (விக்கெட் கீப்பர்), ஹர்வான்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், நமன் புஷ்பக், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார், அன்மோல்ஜீத் சிங், கிலன் படேல், உதவ் மோகன், அமன் சௌஹான்.