வளங்கள் தரும் வைகாசி... சூரியன் குரு அருளால் ஜாக்பாட் பலன்களை பெரும் சில ராசிகள்

வைகாசி மாத பலன்கள்: ஜோதிட ரீதியாக வைகாசி மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சூரியன் ரிஷப ராசியில் சச்சரிக்கும் வைகாசி மாத தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கிறார்.

கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான், மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு செல்லும் போது வைகாசி மாதம் பிறக்கிறது. இதனால் வைகாசி ரிஷப மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

1 /9

தின பலன்கள் மற்றும் ஆண்டு பலன்களைப் போலவே, மாத பலன்கள் கிரக நிலைகளை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. வைகாசி மாத பெயர்ச்சி, கிரக நிலைகள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

2 /9

வைகாசி மாதத்தில், அதாவது மே மாதம் 15ஆம் தேதி சூரிய பகவான் ரிஷப ராசிக்கு பயிற்சி ஆகிறார். அதற்கு ஒரு நாள் முன்னதாக, 2025 மே 14ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.

3 /9

தமிழ் மாதத்தின் இரண்டாவது மாதமான வைகாசியில், சூரியனின் அருளால், அனைத்து செல்வங்களையும் பெற்று, செழிப்பான வாழ்க்கை வாழப் போகும் அதிர்ஷ்ட ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

4 /9

ரிஷப ராசியினருக்கு வைகாசி மாதம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் மாதமாக இருக்கும். வெற்றிகளுக்கு குறைவிருக்காது. புதிய முதலீடுகளை தொடங்க ஏற்ற நேரம் இது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதனால் பொருளாதார நிலை உயரும்.

5 /9

கன்னி ராசியினருக்கு பணியிடத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். இதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய நபரை சந்திக்கலாம். பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமான மாதமாக இருக்கும்.

6 /9

விருச்சிக ராசியினருக்கு வைகாசி மாதத்தில் பெயரும் புகழும் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பாராத பணவரவு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.

7 /9

கும்ப ராசியினருக்கு வைகாசி மாதம், வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் மாதமாக இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு மூலம் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.  

8 /9

மீன ராசியினருக்கு வைகாசி மாதம் லாபங்களை கொடுக்கும் மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வந்த உடல்நல பிரச்சனைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பழைய முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.