Sexual Activity Awareness: உடலுறவில் அதிகமாக ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பக்கவிளைவுகள் மற்றும் அதன் விளைவாக உயிருக்கு ஏற்படும் அபாயங்களை இந்த தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.
Side Effects Of Excessive Sexual Activity: உடலுறவோ அல்லது எந்த செயலாக இருந்தாலும், அது முறையாகவும் அளவாகவும் இருந்தால் உடல்நலத்திற்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், அளவுக்கு மீறிய ஆசையும், அதில் (அதிகப்படியான) ஈடுபாடும் பல்வேறு உடல் மற்றும் மனநலச் சிக்கல்களை உருவாக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், உடலுறவில் அதிகம் ஈடுபடுபவர்களுக்குப் பின்வருபவை போன்ற பக்கவிளைவுகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகமான உடலுறவு உடலின் ஆற்றலை அதிகம் தேவைப்படுத்தும். இதனால் உடல் அதிக களைப்புக்கும், பலவீனத்திற்கும் உள்ளாகலாம்(Excessive physical fatigue).
ஹார்மோன் சமநிலை மாற்றமடைந்து, மனநிலை ஏற்றத் தாழ்வுகள், மனஅழுத்தம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.(Mood swings)
மிக அதிகமாக உடலுறவில் ஈடுபட்டால், பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு, வீக்கம், மற்றும் ஒழுங்கற்ற சிறுநீர் கழிப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.(Itching, swelling, and irregular urination)
பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபட்டால், பாலியல் தொடர்பான நோய்கள் (STDs) பரவும் அபாயம் அதிகரிக்கிறது(Sexually transmitted disease).
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவதால், உடல் மெலிவு, நோயெதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.(Nutrient deficiency)
தொடர்ந்து அதிகமாக உடலுறவில் ஈடுபட்டால், உறவுநிலை பாதிக்கப்படலாம்; மேலும், உடலுறவு பற்றிய ஆர்வம் குறைய வாய்ப்பும் உள்ளது.(affect the relationship)
எல்லாமே சமநிலையில் இருக்க வேண்டும், ஆரோக்கியமான வாழ்விற்கும் உறவிற்கும், நேர்த்தியான சமநிலை அவசியம்.(Must be balanced.)
உடலுறவில் அதிகமாக ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பக்கவிளைவுகள் மற்றும் அதன் விளைவாக உயிருக்கு ஏற்படும் அபாயங்களை இந்த தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம் (Side Effects Of Excessive Sexual Activity).
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.