Vastu Tips: வாஸ்து சாஸ்திரப்படி, காலை எழுந்ததும் நாம் செய்யும் சில தவறுகளால் அன்றைய நாள் முழுவதும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துமாம். எனவே, பாசிட்டிவ் எண்ணங்களுடன் நாளை தொடங்க, சில தவறுகளை செய்வதை தவிர்க்கவும்.
1/7நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். தூங்கி எழுந்ததும் அன்றைய நாள் தொடங்குகிறது. அந்த நாளின் தொடக்கம் சரியாக இருந்தால் மட்டுமே, அந்த நாளும் சரியானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
2/7இப்படியான நிலையில், காலையில் தூங்கி எழுந்ததும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் பற்றியும், தூங்கி எழுந்ததும் எதையெல்லாம் பார்க்கக் கூடாது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
3/7வாஸ்து சாஸ்திரப்படி, காலையில் எழுந்தவுடன் பழுதடைந்த கடிகாரத்தை பார்க்கக் கூடாது என சொல்லப்படுகிறது. தூங்கி எழுந்ததும பழுதான கடிகாரத்தை பார்த்தால் அன்றைய நாளே மோசமாக இருக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. பழுதான கடிகாரம் துரதிர்ஷடத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
4/7மேலும், காலை எழுந்தவுடன் பலரும் கண்ணாடியை பார்க்கும் பழக்கம் இருக்கும். ஆனால், வாஸ்து குறிப்பின்படி, காலை தூங்கி எழுந்ததும் கண்ணாடியில் முகத்தை பார்ப்பது மந்தமான உணர்வை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. நாம் புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கண்ணாடியை பார்த்தால் தான், அன்றைய நாளும் அப்படியாக அமையும் என நம்பப்படுகிறது
5/7வேலையில் இருந்து வீட்டிற்கு வந்த களைப்பில் நம்மில் பலரும் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ மாட்டோம். இதனை காலை எழுந்தவுடன் பலரும் கழுவுகின்றனர். எனவே, தூங்கி எழுந்ததும் அழுக்கு பாத்திரங்களை பார்ப்பது அன்றைய நாளை மோசமாக்கும் என வாஸ்து சாஸ்த்திரத்தில் சொல்லப்படுகிறது. இதற்கு ஒரே வழி, இரவில் தூங்குதற்கு முன்பு பாத்திரங்களை கழுவி வைப்பது. இதன் மூலம், வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும் என நம்பப்படுகிறது.
6/7காலை எழுந்தவுடன் வீட்டில் உள்ள குப்பை தொட்டிகளை பார்ப்பது, வாஸ்து சாஸ்திரப்படி ஒழுங்கற்ற மனநிலை மற்றும் குழப்பமான சூழலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
7/7காலையில் எழுந்தவுடன் நம்மது வீடுகள் அல்லது சுற்றுப்புறங்களில் ஏதேனும் வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம். இதனை காதில் கேட்டப்படி எழுந்திருப்பது, ஜோதீட ரீதியாக அன்றைய நாளை நீர்த்துப் போக செய்யும். அதேபோல, தூங்கி எழுந்ததும் கிழிந்த புகைப்படங்கள், உடைந்த பொருட்கள், மறைந்தவர்களின் படங்களை பார்ப்பதை தவிர்க்கவும் என சொல்லப்படுகிறது