பணம் வீட்டில் தங்க இதை மட்டும் பண்ணுங்க.. வாஸ்து சொல்லும் முக்கிய விஷயம்!

Written ByUmabarkavi K
Published: Nov 09, 2025, 01:58 PM IST|Updated: Nov 09, 2025, 01:59 PM IST

Money Vastu: உங்கள் வீடுகளில் பணம் தங்க வேண்டுமென்றால் இந்த மூன்று விஷயங்களை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என வாஸ்து கூறுகிறது. அது என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

1/7

இந்துக்களின் பெரிதும் நம்பிக்கையாக கருதப்படுவது ஜோதிடத்திற்கு பிறகு, வாஸ்து சாஸ்திரம் தான். குறிப்பாக வாஸ்து குறிப்புகள் நம் வீட்டில்  நேர்மறை ஆற்றலை உருவாக்கின்றன. வாஸ்து குறிப்புகளின் படி, மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பல நன்மைகள் அளிக்கும் என நம்பப்படுகிறது.

 

2/7

குறிப்பாக, அசையா சொத்துகள் வரை அனைத்திற்குமே பலரும் வாஸ்து சாஸ்திரங்களை பார்க்கின்றனர். வீட்டில் நேர்மறை ஆற்றல் வரவும் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

 

3/7

எனவே, வீட்டில் செல்வம் பெருக சில தாவரங்களை நடுவது எதிர்மறை சக்தியை நீக்கி, செல்வ செழிப்போடு இருக்க உதவுவதாக நம்பப்படுகிறது.  இந்து மதத்தில் பல தவராங்கள் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் சின்னங்களாக கருதப்படுவதால், அவற்றை வீடுகளில் வைப்பது மூலம்  செல்வத்தை கொடுக்கும் என கருதப்படுகிறது. அது என்னென்ன தாவரங்கள் என்பது குறித்து பார்ப்போம். 

 

4/7

துளசி செடி இந்து மதத்தில் மிகவும் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், ஆன்மீக ரீதியாக பெரிதும் நம்பிக்கைக்குரிய விஷயமாகவும் கருதப்படுகிறது. எனவே, வீடுகளில் துளசி செடியை வைத்து வழிபட்டால் செல்வம் பெரும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் துளசி செடியை வைத்து வழிபடுவது நிதி பிரச்னைகளை நீக்கி, லட்சுமி தேவியை வீட்டிற்குள் அழைக்கும் என சொல்லப்படுகிறது. வீட்டின் முற்றம் அல்லது கிழக்கு திசையில் துளசி செடியை வைக்கலாம் என வாஸ்து கூறுகிறது. 

 

5/7

மணி ப்ளாண்டை வீடுகளில் வளர்த்தால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. வீட்டில் மணி ப்ளாண்ட் வளர்ப்பதன் மூலம், எதிர்மறை சக்திகள் நீங்கி, வீடுகளில்  செல்வம், மகிழ்ச்சி தங்கும் என நம்பப்படுகிறது.  மணி ப்ளாண்டை வீடுகளில் தென்கிழக்கு திசையில் வைப்பது நல்லது என வாஸ்து கூறுகிறது.

 

6/7

நெல்லிக்காய் மிகவும் மங்களரமான செடியாக கருதப்படுகிறது. இதனை வீட்டில் வளர்ப்பது மிகவும் அரிதானமாக இருந்தாலும், இதனை வீட்டில் வளர்ப்பது வாஸ்து குறிப்புப்படி, நல்லது என சொல்லப்படுகிறது. நெல்லிக்காய் செடியில் விஷ்ணு, லட்சுமி தேவி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம், செல்வம் தங்கும் என வாஸ்து கூறுகிறது. 

 

7/7

இந்த செடிகளை வீட்டின் பிரதான நுழைவாயிலில் வைப்பதன் மூலம் நேர்முறை ஆற்றலை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டில் உளர்ந்த செடிகளை வீட்டின் பிரதான நுழைவாயிலில் வைப்பது வீட்டின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை எனவும் வாஸ்து கூறுகிறது. எனவே, அவற்றை அகற்றி விட்டு, துளசி,  மணி ப்ளாண்ட் செடிகளை வீட்டில் வளர்க்கலாம். (இந்த கட்டுறை ஆன்மீக அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதற்கு எந்தஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால், இதற்கு ஜீ தமிழ் பொறுப்பேற்காது)