Vastu Tips To Attrack Money: உங்கள் வீட்டில் பணம் தங்க வேண்டும் என்றால், வாஸ்து சாஸ்திரப்படி, இந்த தவறுகளை ஒருபோதும் செய்யக் கூடாது என சொல்லப்படுகிறது. அது என்னென்ன என்று பார்ப்போம்.
1/7இந்து மதத்தில் சாஸ்திரங்களை பலரும் பின்பற்றி வருகின்றனர். எந்த காலத்தில் எந்த நேரத்தில் எதை செய்தால் சரியாக இருக்கும், எதை செய்தால் நமக்கு எதிர்மறையான சம்பவங்கள் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திர விதிமுறைகளை பின்பற்றி, தனிமனித வாழ்க்கை தொடங்கி, அசையா சொத்துகள் வரை கணிக்கப்பட்டு இருக்கிறது.
2/7இதனை பலரும் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், வீட்டில் பணம் தங்குவதற்கு சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என வாஸ்து கூறுகிறது. இதனை பின்பற்றினால் வீட்டில் பணம் தங்கும் என நம்பப்படுகிறது. அது என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
3/7வீட்டில் நுழைவாயிலில் குப்பை தொட்டிகளை வைக்க கூடாதாம். குப்பை தொட்டியை வீட்டின் வாசலுக்கு வெளியே வைப்பதன் மூலம் வீட்டிற்கு லட்சுமி வரமாட்டாள் என நம்பப்படுகிறது. எனவே, வீட்டிற்கு வெளியே குப்பை தொட்டிகளை வைப்பதை தவிர்க்கவும்
4/7படுக்கையில் இருந்தபடியே சாப்பிடக் கூடாது என நம்பப்படுகிறது. இதனால், நிதி இழப்பு ஏற்படக் கூடும் என வாஸ்து கூறுகிறது. மேலும், மாலை 6 மணிக்கு பிறகு நகம் வெட்டக் கூடாது என்றும் தலைமுடியை சீவக் கூடாது என்றும் வாஸ்து கூறுகிறது.
5/7வீட்டின் தென்கிழக்கு திசை செல்வத்தின் திசை என வாஸ்து சாஸ்திரப்படி கூறப்படுகிறது. எனவே, அந்த திசையை சுத்தமாக வைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அங்கு அழுக்கு பாத்திரங்கள், அழுக்கு துணிகளையும் போடுவதை தவிர்க்கவும் என வாஸ்து கூறுகிறது.
6/7வாஸ்து படி, கடிகாரத்தை வீடு அல்லது அலுவலகங்களில் கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் வைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இந்த திசைகளில் கடிகாரத்தை வைப்பது மூலம் வீட்டில் செல்லவம் பெருகும் என நம்பப்படுகிறது. மேலும், வீடுகளில் செருப்பு, ஷூக்களை தலைகீழாக வைக்க கூடாது என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.
7/7ஏனென்றால் அது அபசகுணமாக கருதப்படுகிறது. மேலும், வீட்டில் ஈரமான துணிகளை அப்படியே வைக்க கூடாதாம். இதன் மூலம் வீட்டில் பணப் பிரச்னைகள் ஏற்படலாம். மேற்கண்ட அனைத்தையும் தவிர்த்தால், வீட்டில் பணம் தங்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. (Disclaimer: இந்த தொகுப்பு ஆன்மீக அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. இதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை)