திருஷ்டி படாமல் இருக்க வீட்டு வாசலில் இதை மட்டும் பண்ணுங்க!

Home Entrance Vastu Tips: கண் திருஷ்டி படாமல் இருக்க வீட்டு வாசலில் சில விஷயங்களை செய்வதன் மூலம் திருஷ்டி படாமல் இருக்கும் என வாஸ்து குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

 

1 /7

ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்த்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அது நம்முடைய வாழ்க்கையில் ஏற்ற, இறக்கத்திற்கு காரணமாக அமைகிறது. நிலம் சார்ந்த விஷயம் தொடங்கி வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டத்திற்கு வாஸ்து சாஸ்திரம் பின்பற்றப்படுகிறது.   

2 /7

அந்த வகையில், கண் திருஷ்டி என்பது வீட்டின் மீது விழுவதால், நல்ல காரியங்கள் அனைத்தும் தடைப்படும் என்பது ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. எனவே, கண் திருஷ்டி படாமல் இருக்க வீட்டின் முன்பு சில விஷயங்களை செய்வதன் மூலம் அவற்றை நீக்க முடியும்.   

3 /7

அதாவது, வீட்டின் பிரதான நுழைவாயிலில் படிகற்கள் வைப்பதன் மூலம் கண் திருஷ்டி படாமல், வீட்டில்  நேர்மறை விஷயங்கள் நடக்கும் என வாஸ்துவில் கூறப்படுகிறது. படிகற்களை ஒரு கிண்ணத்தில் வீட்டில் மூலையில் வைக்க வேண்டும் என கூறப்படுகிறது.  படிகற்ககை வீட்டில் கட்டுவதாக இருந்தால்,  திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் கட்டலாம்.  

4 /7

இந்த படிகற்களை மாற்றுவதோடு நிறுத்தக் கூடாது. மூன்று அமாவாசைகளுக்கு ஒருமுறை படிகற்களை மாற்ற வேண்டும்.  வருடத்திற்கு நான்கு முறை மாற்றுவது அதிக பலன்களை கொடுக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.   

5 /7

மேலும், தீமைகளில் இருந்து பாதுகாக்கும் தெய்வமான துர்கை அம்மன் படத்தை வைக்கலாம். அங்கு வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே ஒரு பலகையில் சிறிய படம் ஒன்று வைத்து, அதற்கு என்று தனியாக நெய் விளக்கேற்றி வைப்பதால் கண் திருஷ்டி வராமல் தடுக்கும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.  அதே நேரத்தில், வீட்டின் மேல் இருக்கும் கண் திருஷ்டியும் சரியாகிவிடும் என நம்பப்படுகிறது.  

6 /7

கண் திருஷ்டி படாமல், வீட்டில் தினமும் சூடம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றுவதும் நல்லது. குறிப்பாக வீட்டின் தென்கிழக்கு பகுதியில் கற்பூரத்தை ஏற்றி, குலதெய்வத்தை வழிபடுவது நல்லது. மேலும், தினமும் வீட்டில் சாம்பிராணி போடுவது கண் திருஷ்டி வராமல் தடுக்கும். மேலும், வீட்டின் பிரதான நுழைவாயிலில் மாலை 6 மணிக்கு விளக்கேற்ற வேண்டும் என வாஸ்துவில் கூறுகிறது.  

7 /7

துளசி செடிகளை வீட்டில் வளர்ப்பது கண் திருஷ்டி படுவதை தடுக்கும் என வாஸ்துவில் கூறப்படுகிறது. துளசி செடிகளை வீட்டின் வடக்கு, வடகிழக்கில் ஒரு கதவுக்கு அருகிலோ அல்லது ஜன்னலுக்கு அருகிலோ அல்லது வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே வைக்கலாம். வைப்பதோடு நிறுத்தாமல், துளசி செடிக்கு தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும். (இந்த கட்டுறை ஆன்மீக அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதற்கு எந்தஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால், இதற்கு ஜீ தமிழ் பொறுப்பேற்காது)