கொலஸ்ட்ராலை அடியோடு போக்கும் காய்கறி ஜூஸ்களின் பட்டியலில் முதல் 5 இடங்கள்
இயற்கை நமக்கு அளித்த வரங்களில் ஒன்று பழங்கள், காய்கறிகள். அவற்றில்தான் நம் உடல் நலம் காக்கும் எத்தனை எத்தனை மருத்துவ குணங்கள் பழங்கள், காய்கறிகள் மட்டுமே உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த ரகசியம் புரியும். நாமும் அதைப் பின்பற்றுவோம், நல்வாழ்வு வாழ்வோம். பச்சை காய்கறிகள் சாப்பிடுவதால் உங்கள் உடலில் நேர்மறை மாற்றங்கள் அதிகம் ஏற்படும்
உடல் நலம் காக்கும் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட காய்கறிகள் நாம் ஆரோக்கியமாக வாழ அவசியமானவை ஆகும். காய்கறிகள் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது என்றால், அவற்றில் சில பச்சையாய் சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்துவிடும்.
உடலில் படிந்திருக்கும் அதிக கொழுப்புகளை கரைக்க, சமைக்காமல், அதிலும் ஜூஸாக குடிக்க ஏற்ற காய்கள் மிகவும் சில தான் என்றால், அதில் முதல் இடங்களை பிடிக்கும் சில சிறப்பான காய்கறிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
கெட்ட கொழுப்பைக் குறைக்கும் பூசணி சாறு அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பூசணிக்காயை ஜூஸாக உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும் தன்மையும் பூசணி சாற்றில் உள்ளது. மேலும், பூசணி சாறு நார்ச்சத்து நிறைந்தது, எனவே அதை உட்கொள்வது அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
கேரட் ஜூஸ் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் கேரட்டை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம், அதன் சாறும் குடிக்கலாம். கேரட் ஜூஸ் குடிப்பது அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க ஒரு நல்ல வழி, ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும்.
கெட்ட கொழுப்பைக் குறைக்க சுரைக்காய் சாறு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் பல சிறப்புப் பண்புகள் சுரைக்காயில் உள்ளது. சில ஆய்வுகளின்படி, தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் சாறு குடிப்பது உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கெட்ட கொழுப்பைக் குறைக்க முட்டைக்கோஸ் சாறு அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு முட்டைக்கோஸ் சாறு ஒரு நல்ல தேர்வாக இருக்கும், முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்து மற்றும் பைட்டோஸ்டெரால் ஆகிய மூலக்கூறுகள் அதிக கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கெட்ட கொழுப்பைக் குறைக்க கீரை சாறு கீரையில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது உடலில் இருந்து கெட்ட கொழுப்பை அகற்ற உதவுகிறது. கீரை சாறு குடிப்பதால் உடலில் உள்ள தமனிகள் மற்றும் இரத்த நாளங்கள் சுத்தமாகும், இது கெட்ட கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.