இரும்பு பாத்திரத்தில் சமைத்தால்... காய்கறிகளின் சுவை - ஊட்டச்சத்து... இரண்டும் இரட்டிப்பாகும்...

Published: Jun 26, 2025, 05:37 PM IST|Updated: Jun 26, 2025, 05:37 PM IST

இரும்பு பாத்திரங்களில் உணவை சமைப்பது, பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக் கூடியவை. அதிலும் ரத்த சோகை உள்ளவர்கள், இரும்பு பாத்திரத்தில் செய்த உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு பாத்திரங்கள், அதிக வெப்பத்தை தாங்க கூடும் என்பதால், உணவு சீராக சமைக்கப்பட்டு அதன் சுவை அதிகரிக்கிறது. அதோடு உடலுக்கு தேவையான இரும்பு சத்தத்தையும் முழுமையாக பெறலாம்.

Iron Utensils1/8

இரும்பு பாத்திரங்கள்

பல நூற்றாண்டுகளாக, உணவை சமைக்க இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எவர்சில்வர் பாத்திரங்களை போல் இவற்றை பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொண்டால் இதனை வழக்கமாக பயன்படுத்த தொடங்குவீர்கள். அதிலும் சில குறிப்பிட்ட காய்கறிகளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது அதன் ஊட்டச்சத்து மதிப்பை பெரும் அளவு அதிகரிக்கும்.

Bottle gourd2/8

சுரைக்காய்

சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்த அற்புதமான காய்கறி ஆன சுரைக்காய் இரும்பு சட்டியில் நிதானமாக சமைக்கும் போது சுவை,  ஊட்டச்சத்து இரண்டும் மேம்படும். இதில் உள்ள காரத்தன்மை இரும்பை சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது.

Fenugreek3/8

வெந்தயம் அல்லது வெந்தயக்கீரை

வெந்தயம் அல்லது வெந்தயக்கீரை இரண்டையும் இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால் அதன் கசப்பு சுவை சிறிது குறையும் என்பதோடு, இரும்பு சத்து இயற்கையாகவே அதிகரிக்கிறது. வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி ரத்த சோகை நீங்க இருபதுவும்.

Brinjal4/8

பாகற்காய்

பாகற்காயை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால் அதை சுவை கூடுவதோடு, அதில் உள்ள இரும்புச்சத்து மதிப்பும் அதிகரிக்கிறது. ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாக அமையும்.

Brinjal5/8

கத்திரிக்காய்

கத்திரிக்காயை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால் அதன் சுவை மனம் இரண்டும் அதிகரிக்கும். இதில் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள நிலையில், சிறந்த வெயிட் லாஸ் காய்கறியாக இது இருக்கும்.

Ladies Finger6/8

வெண்டைக்காய்

வெண்டைக்காயை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால், கொல கொலப்பு இல்லாமல் மொறுமொறுப்பாக இருக்கும். இது இயற்கையான இரும்புச்சத்து அதிகரிப்பதோடு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Capsicum7/8

குடைமிளகாய்

குடைமிளகாயை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதால் சுவை கூடும். இதில் உள்ள வைட்டமின் சி, இரும்பு சத்து உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது. குடைமிளகாயை முறுமுறுப்பாகவும் சுமையாக சுவையாகவும் தயாரிக்க இது உதவுகிறது

Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.