சுக்கிர நட்சத்திர பெயர்ச்சி: பண மழையில் நனையப்போகும் இந்த 4 ராசிகள்!

சுக்கிர பகவான் பூரட்டாதி நட்சத்திர பெயர்ச்சி அடைய இருக்கும் நிலையில், இந்த 4 ராசிகளின் வாழ்வில் பொருளாதார நிலை உயரும், மகிழ்ச்சி அதிகமாகும்.

சுக்கிர பகவான் செல்வம், சொகுசு, அழகு, கலை மற்றும் காதல் ஆகியவற்றை வழங்கும் வல்லமை கொண்டவர். அவர் நட்சத்திர பெயர்ச்சி அடைவது பலரின் வாழ்வில் தாக்கத்தை உண்டாக்கும்.

1 /8

கிரகங்கள் ராசிகள் மற்றும் நட்சத்திரங்கள் இடையே பெயர்ச்சி அடைவது ஜோதிடத்தில் அதிகம் கவனிக்கப்படும் ஒன்றாகும். குறிப்பிட்ட நேரத்தில் கிரகங்கள் அதன் இயக்கத்தை மாற்றினாலும் , பெயர்ச்சி அடைந்தாலும் 12 ராசிக்காரர்களுக்கும் நேரடி தாக்கம் இருக்கும்.   

2 /8

அந்த வகையில், தற்போது சுக்கிர பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். சுக்கிர பகவான் செல்வம், சொகுசு, அழகு, கலை, காதல் ஆகியவற்றை அளிக்க வல்லவர். அந்த வகையில், இவரது நட்சத்திர பெயர்ச்சி இந்த விஷயங்களில் சில ராசிகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும்.   

3 /8

அந்த வகையில், சுக்கிர பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை இருப்பார். ஏப். 1ஆம் தேதி அதிகாலை 4.25 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவார். அதே போல், வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வரை பூரட்டாதியில் இருப்பார். சுக்கிர பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு நேர்மறையான தாக்கம் உண்டாகும். அந்த நான்கு ராசிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.  

4 /8

ரிஷபம்: நீங்கள் நீண்ட காலமாக நினைத்த காரியம் நிறைவேறும். நிறைவைடயாமல் இருக்கும் காரியங்களும் நிறைவடையும். புதிய வேலைவாயப்புகள் உங்களை தேடி வரும். தொழிலில் பெரிய ஆப்பர்கள் வரும். பொருளாதாரம் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் வரும். பணத்தை சேமிக்க முடியும், இதனால் பிரச்னைகளும் தீரும். காதல் வாழ்விலும் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்வில் பிரச்னைகள் தீரும்.   

5 /8

மகரம்: வாழ்வில் பல நேர்மறையான தாக்கம் உண்டாகும். தடைகள் நீங்கள். குடும்பத்தினரிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். புதிய நிலம் அல்லது வீடு அல்லது வாகனங்களை நீங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்வும் சிறப்பாக இறுக்கும். திருமண வாழ்வில் தடைகள் நீங்கும், வாழ்வில் சொகுசுகள் கைக்கூடி வரும். குடும்பத்தினருடன் நேரத்தை சிறப்பாக செலவழிக்கலாம்.   

6 /8

கும்பம்: மாணவர்களுக்கு நல்ல காலம் பிறக்கிறது. மாணவர்கள் தேர்விலும், போட்டிகளிலும் சிறப்பாக செயலாற்றுவார்கள். பணியில் இருப்போருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்வதற்கான தொகை உங்கள் கைகளில் கூடி வரும். புதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சிறப்பான பலன்களை கொடுக்கும். திருமணம் நடக்காதவர்களுக்கு நல்ல செய்தி வரும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.   

7 /8

மீனம்: இந்த நேரத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்வில் சுப காரியங்கள் நடக்கும். தொழிலிலும், பணியிலும் தொடர்ச்சியான வெற்றிகள் கிடைக்கும். வாழ்வின் புதிய தளத்திற்கு சென்று அங்கும் வெற்றிகளை குவிப்பீர்கள். திருமண வாழ்க்கையில் இணையருடனான உறவு பலப்படும். வீட்டில் பணமழை கொட்டும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யப்படவில்லை.