சுக்கிர பகவான் சிம்ம ராசிக்குள் நுழைய உள்ளதால் சில ராசிக்கு அதிர்ஷ்டம் என்று ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1/6நவக்கிரகங்களில் இன்பம், செல்வம், காதல், ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணியாக விளங்குபவர் சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவருக்கு அனைத்து விதமான செல்வ செழிப்பும் தேடி வரும்!
2/6அந்த வகையில் சுக்கிர பகவான் வரும் செப்டம்பர் 15 அன்று, சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இந்த சுக்கிரன் பெயர்ச்சி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களை அள்ளி தரவுள்ளது.
3/6இந்த சுக்கிர பெயர்ச்சியின் மூலம், இந்த மூன்று ராசிக்காரர்களும் வாழ்வில் ஒரு புதிய உத்வேகத்தையும், வளர்ச்சியையும் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
4/6சிம்மம்
சுக்கிரனின் இந்த பெயர்ச்சி, சிம்ம ராசியிலேயே நிகழ்வதால், இதன் முழு பலன்களையும் இந்த ராசிக்காரர்கள் அனுபவிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும்.
5/6துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் முழுமையான கருணை பார்வை கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சண்டைகள், சச்சரவுகள் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கும், மரியாதையும் உயரும்.
6/6விருச்சிகம்
இந்த சுக்கிரன் பெயர்ச்சி, விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பும் ஒரு காலமாக அமையப்போகிறது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகி, பணப் பற்றாக்குறை நீங்கும். நிதி நிலைமை வலுப்பெறும்.