ஜேசன் சஞ்சய் ஷூட்டிங்கில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்-ஆ? நீங்களே பாருங்க..வைரல் போட்டோஸ்..

Written ByYuvashree
Published: May 07, 2025, 01:36 PM IST|Updated: May 07, 2025, 01:36 PM IST

Jason Sanjay First Film Shooting Spot Photos : தமிழ் திரையுலகிற்கு புது இயக்குநராக வந்திருப்பவர், ஜேசன் சஞ்சய். இவரது முதல் படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Jason Sanjay First Film Shooting Spot Photos : கோலிவுட்டிற்கு புது வரவாக வந்திருப்பவர் ஜேசன் சஞ்சய். நடிகர் விஜய்யின் மகனான இவர் தற்போது தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். இதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். சந்தீப், தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுவதை தொடர்ந்து, அவருக்கென ஸ்பெஷலாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் ஜேசன் சஞ்சய்யின் முக ஜாடை குறித்து அனைவரும் பேசி வருகின்றனர். 

ஜேசன் சஞ்சய்1/7

ஜேசன் சஞ்சய்

24 வயதாகும் ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பு, 2023ல் வெளியானது.

விஜய் மகன்2/7

விஜய் மகன்

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், அவர் நடித்த போக்கிரி மற்றும் வேட்டைக்காரன் திரைப்படத்தின் பாடல்களில் குட்டிப் பையனாக வந்து நடனமாடியிருக்கிறார். அதன் பிறகு இவரை ஆளையே காணவில்லை. 

விஜய் முக ஜாடை3/7

விஜய் முக ஜாடை

ஜேசனை பார்க்கும் பலர், அவருக்கு அப்படியே தனது தந்தையின் முக ஜாடை இருப்பதாக கூறுவதுண்டு. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அது உண்மை என்றே தோன்றுகிறது அல்லவா?

ரொம்ப ஸ்ட்ரிக்டா4/7

ரொம்ப ஸ்ட்ரிக்டா

லைகா நிறுவனம், சந்தீப் கிஷனின் பிறந்தநாளையொட்டி அவருக்காக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. ஆனால், இந்த வீடியோவில் பெரும்பாலும் ஜேசன்தான் இடம் பெற்றிருக்கிறார். இவரை இதில் பார்க்க ரொம்ப ஸ்ட்ரிட்க் ஆஃபிசர் போல இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.

அச்சு அசல் அப்பாவே5/7

அச்சு அசல் அப்பாவே

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த ஜேசன், பின்பு வெளிநாட்டில் பட்டப்படிப்பு படித்தார். சில குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார்.ஜேசன், சிரிக்கும் போதும் பேசும் போதும் அப்படியே விஜய் போல இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். 

சந்தீப் கிஷன் பிறந்தநாள்6/7

சந்தீப் கிஷன் பிறந்தநாள்

சந்தீப் கிஷன்-ஜேசனின் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே கடனில் மூழ்கியிருக்கும் லைகா நிறுவனத்தின் ஒரே நம்பிக்கை இந்த படம்தான் என்றும் கூறப்படுகிறது. 

படப்பிடிப்பு தளம்7/7

படப்பிடிப்பு தளம்

ஜேசன், படப்பிடிப்பு தளத்தில் படத்தை இயக்கும் புகைப்படங்கள் தற்போது இணையவாசிகள் மத்தியில் வைரலாகி வருகிறது.