இந்திய அணியின் நட்சத்திர வீரரின் 10ஆம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் எடுத்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் மாணவிகள் 95.88 சதவிகிதம் பேரும் மாணவர்கள் 91.74 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் விளையாடி 100 சதங்களை அடித்து சச்சினின் சாதனையை முறியடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தார். இனி அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவார்.
இந்நிலையில், விராட் கோலியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் வைரல் ஆகி வருகிறது. அவர் ஆங்கிலத்தில் 83, இந்தியில் 75, கணிதத்தில் 51, அறிவியலில் 32, சமூக அறிவியலில் 81 மற்றும் இண்ட்ரோடக்டரியில் 74 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.
விராட் கோலி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர். 12ஆம் வகுப்பு வரை படித்த அவர், கல்லூரி செல்வதற்கு முன்பாகவே ஐபிஎல் தொடரில் ஒப்பந்தத்தை கைப்பற்றினார்.