Virat Kohli ODI Records Against Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான விராட் கோலியின் ஒருநாள் சாதனைகள் குறித்து பார்ப்போம்.
Virat Kohli ODI Records Against Australia: நாளை மறுநாள் (அக்டோபர் 19) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் சாதனைகள் என்னென்ன என்ற முழு விவரத்தை இங்கு பார்க்கலாம்.
50 ஒருநாள் போட்டிகள்: இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 2009 முதல் 2025 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஒருநாள் சர்வதேச (ODI) போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ரன்கள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராnஅ ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 54.46 சராசரி மற்றும் 93.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2,451 ரன்கள் எடுத்துள்ளார். வர இருக்கும் தொடரிலும் அவர் பெரிய ஸ்கோரை பெற முயற்சிப்பார்.
அதிகபட்ச ஸ்கோர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோராக 123 ரன்களை எடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தொடரின் மூன்றாவது போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
சதங்கள் மற்றும் அரை சதங்கள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 8 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களை விளாசி இருக்கிறார்.
பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி 212 பவுண்டரிகள் மற்றும் 25 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டி: மார்ச் 04ஆம் தேதி துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதிப் போட்டியின் போது விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். அப்போடியில் அவர் 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். இவரது இந்த இன்னிங்ஸ் இந்திய அணி அத்தொடரின் இறுதி போட்டிக்கு சொல்ல முக்கிய பங்காக அமைந்தது.
ஆஸ்திரேலியாவில் விராட் கோலி: ஆஸ்திரேலியாவில், விராட் கோலி 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 51.90 சராசரியாக 1,327 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும்.