வாக்காளர் சரிபார்ப்புக்குத் தேவையான 13 ஆவணங்கள் - முழு பட்டியல்

Voter Verification : வாக்காளர் சரிபார்ப்புக்குத் தேவையான 13 ஆவணங்கள் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

Voter Verification : வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் போது வாக்காளர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய 13 ஆவணங்கள். இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

1 /13

ECI SIR 2.0 திருத்தம்: இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI), வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR 2.0) தொடர்பான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர்களின் தகுதியை நிரூபிக்கப் பயன்படுத்தக்கூடிய 13 செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலை ஆணையம் வெளியிட்டுள்ளது.  

2 /13

தமிழ்நாடு, அந்தமான் - நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, இராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பெரிய அளவிலான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது.  

3 /13

இது, நாடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கவும், திருத்தவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட ஒரு விரிவான, வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் இயக்கமாகும். பட்டியலில் உள்ள அனைவரும் தகுதியுள்ள குடிமக்கள் என்பதை உறுதி செய்வதும், இறந்தவர்கள் அல்லது இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள், இரண்டு இடங்களில் ஒருவருக்கு இருக்கும் வாக்குரிமையை நீக்குவதும் இதன் நோக்கமாகும்.  

4 /13

வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (Booth Level Officers - BLOs) வீடுகளுக்குச் சென்று, வாக்காளர் தகவல்களைச் சரிபார்ப்பார்கள், புதிய விண்ணப்பங்களைப் பெறுவார்கள். தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்களை வாக்ககாளர் பட்டியலில் இருந்து நீக்குவார்கள்.  

5 /13

SIR 2.0 சரிபார்ப்புச் செயல்பாட்டின் போது அடையாளச் சான்று, வயதுச் சான்று அல்லது இருப்பிடச் சான்றாகப் பயன்படுத்தக்கூடிய 13 ஆவணங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:  

6 /13

மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து (PSU) பெறப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதியத் தொகை ஆணை (PPO).  

7 /13

உள்ளூர் அமைப்பு, வங்கி, அஞ்சல் அலுவலகம், LIC அல்லது பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து ஜூலை 1, 1987-க்கு முன்னர் வழங்கப்பட்ட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது ஆவணம்.  

8 /13

பிறப்புச் சான்றிதழ். இந்திய அரசால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட். அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்ற மெட்ரிகுலேஷன் அல்லது கல்விச் சான்றிதழ்.  

9 /13

நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ் (Permanent Residence Certificate). அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியால் வழங்கப்பட்ட வன உரிமைச் சான்றிதழ் (Forest Right Certificate).  

10 /13

தகுதியான அதிகாரியால் வழங்கப்பட்ட ஓபிசி/எஸ்.சி/எஸ்.டி அல்லது சாதிச் சான்றிதழ். பொருந்தக்கூடிய இடங்களில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து பெறப்பட்ட ஆவணம்.  

11 /13

மாநில அல்லது உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு (Family Register). அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டிற்கான ஒதுக்கீட்டுச் சான்றிதழ் (Land or House Allotment Certificate). ஆதார் அட்டை (இது அடையாளச் சான்றாக மட்டுமே பயன்படுத்தப்படும், குடியுரிமைக்கு அல்ல).   

12 /13

இந்தியத் தேர்தல் ஆணையம், ஆதார் அட்டை தனியாகக் குடியுரிமை அல்லது வயதை நிரூபிக்கப் போதுமானதல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. SIR 2.0 சரிபார்ப்புக்கு ஆதார் அட்டையைச் சமர்ப்பிக்கும் வாக்காளர்கள், தேவைப்பட்டால், சரிபார்ப்புக்காக மற்றொரு தகுதியுள்ள ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.  

13 /13

முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரையோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரையோ கண்டுபிடிக்க முடியாத அல்லது இணைக்கப்படாத வாக்காளர்கள் மற்றும் தனிநபர்களுக்கு இந்த ஆவணங்கள் கட்டாயமாகும். ஏற்கனவே விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள மற்ற வாக்காளர்கள், தேவையான தகவலைப் புதுப்பித்து, புதிய படிவங்களை மட்டும் பூர்த்தி செய்யலாம்.