வெறும் வயிற்றில் வாக்கிங், உடற்பயிற்சி செய்தால்... இந்த 4 நோய்கள் வரலாம்

Written ByR Balaji
Published: Apr 13, 2025, 04:55 PM IST|Updated: Apr 13, 2025, 04:55 PM IST
உடற்பயிற்சி செய்வது மற்றும் நடப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமான ஒன்றாகும். ஆனால் வெறும் வயிற்றில் இதை செய்வதால் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அது குறித்தே இத்தொகுப்பில் பார்க்க போகிறோம். 

உடற்பயிற்சி செய்வது மற்றும் நடப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமான ஒன்றாகும். ஆனால் வெறும் வயிற்றில் இதை செய்வதால் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. அது குறித்தே இத்தொகுப்பில் பார்க்க போகிறோம். 

1/5

இரத்த சர்க்கரை குறைவு 

எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் உடற்பயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இது தலைசுற்று, நடுக்கம், குழப்பம், தலைவலி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தலாம். 

ஹார்மோன் சமநிலையின்மை 2/5

ஹார்மோன் சமநிலையின்மை

உணவு எடுத்துக்கொள்ளாமல் உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் கட்டுப்படுத்தும் ஹார்மோனகளை பாதிக்கும். இதனால் கார்டிசோலின் அளவு காலப்போக்கில் அதிகமாக இருக்கும்போது, அது தூக்கத்தை கெடுக்கும், தொப்பை கொழுப்பை அதிகரிக்கும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட பலவீனப்படுத்தும். 

இதய பிரச்சனை அதிகரிக்கும் அபாயம் 3/5

இதய பிரச்சனை அதிகரிக்கும் அபாயம்

சாப்பிடாமல் உடற்பயிற்சியோ அல்லது வாக்கிங் செய்வதோ இரத்த ஓட்டத்தை தற்காலிகமாக குறைக்கும். இது இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் ஒழுங்கற்ற இதய தாளங்கள் மற்றும் மார்பு வலி ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். 

இரைப்பை பிரச்சனைகள் மற்றும் அமிலத்தன்மை 4/5

இரைப்பை பிரச்சனைகள் மற்றும் அமிலத்தன்மை

உணவை எடுத்துக்கொள்ளாமல், உடற்பயிற்சி செய்வது செரிமானத்திற்காக உற்பத்தி செய்யப்படும் அமிலம் தீங்கு விளைவிக்கும். உடல் செயல்பாடுகளின் போது, இந்த அமிலம் வயிற்றுப் புறணியை எரிச்சலடைய செய்து அமில ரிஃப்ளக்ஸ், வீக்கம் அல்லது இரைப்பை அழற்சிக்கு வழிவகுக்கும். சிலருக்கு இது லேசான அசெளகரியத்தை கொடுக்கும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். 

5/5

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)