Virat Kohli Fitness: ஆரோக்கியமாக இருக்க பலரும் பல விஷயங்களை பின்பற்றுகின்றனர். விராட் கோலி பிட்டாக இருக்க என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவை தாண்டி உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார். விளையாட்டை தாண்டி சிறந்த பிட்னஸ் ஐகானாகவும் விராட் உள்ளார்.
இந்த வயதிலும் உடலை பிட்டாக வைத்திருக்க விராட் கோலி கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை பின்பற்றுகிறார். அது என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
விராட் கோலி தினசரி ஆரோக்கியமான உணவை மட்டுமே பின்பற்றுகிறார். கூடுதல் சக்கரை, ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கிறார். காய்கறிகள், முழு தானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
விராட் கோலி தினசரி உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறார். இதில் வலிமை பயிற்சி, கார்டியோ போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். தினசரி ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை என்றாலும், உடலுக்கு வேலை கொடுத்தாலே போதும்.
உடற்தகுதியை தாண்டி மன அமைதியும் ஒருவருக்கு முக்கியம். விராட் கோலி ஆரோக்கியமாக இருக்க நினைவாற்றல் மற்றும் தியான பயிற்சி செய்கிறார். வேலையை தாண்டி குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவது மனதிற்கு நல்லது.
விராட் கோலி ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்கிறார். நீர்ச்சத்துடன் இருக்க தினசரி போதுமான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்கிறார். உடல் நீரேற்றமாக இருப்பது எப்போதும் முக்கியமானது.