Chennai Super Kings: சிஎஸ்கே தன்னை டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக வெளியான தகவல்களுக்கு வாஷிங்டன் சுந்தரே தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதனை இங்கு விரிவாக காணலாம்.
CSK Washington Sundar Trade: குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கும் வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கே டிரேட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அஸ்வினின் (Ravichandran Ashwin) யூ-ட்யூப் சேனலிலும் இதுகுறித்து பேசப்பட்டது. இந்நிலையில், வாஷிங்டன் சுந்தரை தொலைப்பேசியில் அழைத்து, அஸ்வின் அவரது கருத்தை பெற்றுள்ளார்.
1/8ஐபிஎல் மினி ஏலம் (IPL 2026 Mini Auction) வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில், நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என கூறப்படுகிறது.
2/8இதை முன்னிட்டு தற்போது டிரேடிங் (IPL Trade) பேச்சுவார்த்தையும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் சிஎஸ்கே அணி வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்துவிட்டதாக தகவல்கள் பரவின.
3/8அதாவது, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் All-In Cash மூலம் வாஷிங்டன் சுந்தரை (Washington Sundar) சிஎஸ்கே டிரேட் செய்யப்போவதாக கூறப்பட்டது. இதன்மூலம், சிஎஸ்கேவில் இருந்து வீரர்கள் யாரும் குஜராத் அணிக்கு செல்ல மாட்டார்கள் என்றும் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே டிரேட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
4/8குறிப்பாக, முன்னாள் இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வினின் (Ravichandran Ashwin) யூ-ட்யூப் சேனலில், கடந்த சனிக்கிழமை (அக். 25) அன்று வெளியான வீடியோவில் முன்னாள் தமிழ்நாடு வீரர் கே. விக்னேஷ் வாஷிங்டன் டிரேட் குறித்து பேசியிருந்தார். அதில், வாஷிங்டன சுந்தரை சிஎஸ்கே டிரேட் செய்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார்.
5/8இதையடுத்து, பலரும் வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கேவுக்கு (Chennai Super Kings) வருவதை வரவேற்று சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். அஸ்வினுக்கு மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர் சிஎஸ்கே அணியில் இருப்பார் என கூறப்பட்டது.
6/8இந்நிலையில், ரவிசந்திரன் அஸ்வின் அவரது சேனலில் நேற்று (அக். 28) பதிவிட்ட வீடியோவில், சிஎஸ்கேவின் டிரேட் குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறிய கருத்தை அஸ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொலைபேசியில் வாஷிங்டன் சுந்தரை அழைத்து பேசியதாக அஸ்வின் தெரிவித்தார்.
7/8அஸ்வினிடம் வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது, "விக்னேஷ் சொல்லியதை கேட்ட நானே ஷாக் ஆகிவிட்டேன், நானே விக்னேஷுக்கு போன் பண்ண வேண்டும் என நினைத்தேன், அதற்குள் நீங்கள் போன் செய்துவிட்டீர்கள். இதுவரை எனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது. கடந்தாண்டு என்னை குஜராத் எடுத்தது, நான் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை என்றாலும் இங்கு மிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்தையும் மேம்படுத்த இங்கு எனக்கு வாய்ப்பு இருக்கிறது. பயிற்சியும் தரமாக வழங்கப்படுகிறது. உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம், ஆனால் அதுபற்றி எனக்கு தெரியாது" என்றார்.
8/8இவ்வாறு அஸ்வினிடம் வாஷிங்டன் சுந்தர் கூறியிருக்கிறார். அஸ்வினும் இதுகுறித்து கூறுகையில்,'இந்த டிரேடிங்கில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிக்கு எந்த லாபமும் இல்லை. சிஎஸ்கேவுக்கே மட்டும்தான் லாபம் இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் குஜராத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்றாலும் கூட, ஏலத்திற்கு வந்தால்தான் அதிக தொகை கிடைக்கும். எனவே, இந்த டிரேடுக்கு வாய்ப்பில்லை' என்றார்.