பெண்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டாலும், முழுமையான சுதந்திரம் அவர்களின் வளர்ச்சியிலும் சுயமரியாதையிலும் உள்ளது என்பதைக் கூறும் சில சிறப்புத் தமிழ்த் திரைப்படங்கள் உள்ளன. இந்தப் படங்கள், பெண்கள் தங்கள் கனவுகளைத் துரத்தி, சமூகத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி எப்படி வெற்றியை அடைகின்றனர் என்பதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகின்றன.
நம்மை நாம் நேசிக்க வேண்டும், அப்போதுதான் உலகமும் நம்மீது அன்பும் மரியாதையும் செலுத்தும் என்பதைக் கூறும் மனதைக் கனக்க வைக்கும் கதைகள் இந்த திரைப்படங்களில் காணலாம். பெண்களின் உள்மன அழகையும், அவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் கொண்டாடும் இப்படங்கள், ஒவ்வொரு பெண்களும் தங்கள் வாழ்வில் உற்சாகத்துடன் முன்னேற உதவக்கூடும்.
ராட்சசி(Raatchasi): பெண்கள் கல்வி, சமத்துவம், மற்றும் சமூக மாற்றத்திற்காகப் போராட வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்.
அறம்(Aramm): நடிகை நயன்தாராவின் அற்புதமான தனித்துவமான நடிப்பில் இப்படம் மக்களின் உள்ளுணர்வைத் தூண்டுகிறது. சவால் நிறைந்த போராட்ட கதைக்களமான திரைப்படம்.
பொன்மகள் வந்தாள்(Ponmagal Vandhal): ஒரு பெண் நீதிக்காகத் தனியாகப் போராடி சமூகத்துக்கு உண்மையை வெளிப்படுத்தும் நீதி தேடல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
அருவி(Aruvi): பெண்ணின் வாழ்க்கை, சமூகத்தால் உருவாக்கப்பட்ட தடைகள், மற்றும் அவற்றை எதிர்த்துப் போராடும் பயணத்தை விவரிக்கும் படம்.
36 வயதினிலே(36 Vayadhinile): குடும்பப்பணியில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் தங்கள் கனவுகளைத் துரத்த வேண்டும் என்பதைக் கூறும் மனநோக்கான படம்.
கனா(Kanaa): கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் ஒரு பெண்ணின் கனவு, போராட்டம், மற்றும் வெற்றியைக் கொண்டாடும் படம்.
மகளிர் மட்டும்(Magalir mattum): பெண்களின் நட்பு, தன்னம்பிக்கை, மற்றும் சுயமரியாதையை முன்னிறுத்தும் சகாப்தமான திரைப்படம்.
இந்த திரைப்படங்கள் பெண்களின் சக்தி, உறுதி, மற்றும் விடாமுயற்சியைப் பிரதிபலிக்கும் சிறப்பான படைப்புகள் நிறைந்த பெண்மையின் உணர்வைப் புரியவைக்கும் படங்களாக அமைகிறது.