Weekly Horoscope March 10th To 16th: கிரகப்பலன்களின் படி 12 ராசிக்காரர்களுக்கும் அந்த நாள் அல்லது அந்த வாரம் அமையும். அப்படி இந்த வாரம் உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Weekly Horoscope March 10th To 16th: மேஷ ராசி முதல் மீன ராசி வரை உள்ள 12 ராசிகளுள், அனைத்திற்கும் அதற்கு எற்றவாறு பலன்கள் அமையும். அந்த வகையில், இந்த வாரம் உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
இந்த வாரம் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுதரும். நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வீன் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் அமைதி இருக்கும் ஆனால், வெளிப்படைத்தன்மையை பேணுவது மிக அவசியம். மேலும், இங்கள் உடல்நலம் மீது கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்: 5
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நம்பிக்கையான வாரமாக இருக்கும். இது தொழி செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் புதிய முதலீடுகளை செய்ய விரும்பினால் இந்த வாரம் அதற்கான முற்சிகளை மேற்கொள்ளலாம். பணியாளர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மேலும், குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் அது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்: 8
இந்த வாரம் உங்கள் கவனம் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் இருக்கும். ஒரு புதிய திட்டம் அல்லது வாய்ப்பு உங்களுக்கு நன்மை பயக்கும். உறவுகளில் இனிமை நிலைத்திருக்கும். ஆனால் உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்துவது அவசியம். பயணம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கலாம். அது உங்களுக்கு அமைதியை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3
வாரத்தின் தொடக்கத்தில் உணர்ச்சி ரீதியாக சில சவால்கள் இருக்கலாம். ஆனால் படிப்படியாக நிலைமை மேம்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு பழைய நண்பர் உங்களுக்கு உதவலாம். ஒரு சிறிய உடல்நலப் பிரச்சினை இருக்கலாம். ஆனால் கவலைப்பட ஒன்றுமில்லை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 7
சிம்ம ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு வெற்றியையும் மரியாதையையும் தரும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். காதல் வாழ்க்கையில் சில திருப்பங்கள் வரலாம். அது உங்களுக்கு உற்சாகத்தை தரும். அதிர்ஷ்ட நிறம்: தங்கம் அதிர்ஷ்ட எண்: 1
இந்த வாரம் நீங்கள் பொறுமையுடனும் புரிதலுடனும் செயல்படுவீர்கள். எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து எடுங்கள். பணியிடத்தில் சவால்கள் இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். மேலும், உங்கள் உடல் நலத்தில் சிறிது சரிவுகள் ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு அதிர்ஷ்ட எண்: 4
துலாம் ராசிக்காரர்களே இந்த வாரம் காதம் மற்றும் உறவுகளை வலுப்படுத்தும் வாரமாக இருக்கும். சில பழைய தகராறுகள் தீர்க்கப்படலாம். நிதி நிலைமை மேம்படும். ஆனால் செலவுகளை கட்டுப்படுத்துவது முக்கியம். தொழிலில் சாதகமான மாற்றங்கள் சில ஏற்படக்கூடும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆனால் மன அழுத்தத்தை தவிர்க்கவும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்: 6
இந்த வாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் சில முக்கியமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகள் வரலாம். அதனை பொறுமையாக கடைபிடிக்கவும். மேலும், உங்கள் உடல்நலத்தில் கவனமாக இருங்கள். யோகா செய்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மெரூன் அதிர்ஷ்ட எண்: 2
இந்த வாரம் நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். புதிய வாய்ப்புகளை பெறலாம். அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் உணவில் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 9
இந்த வாரம் உங்களது உழைப்பு மற்றும் பொறுமை சோதிக்கப்படும். ஆனால் இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் ஒரு முக்கியமான நபரை நீங்கள் சந்திக்க நேரிடும். இது உங்கள் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். குடும்பத்தில் இருந்த பழைய தகராறுகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் அதிர்ஷ்ட எண்: 10
கும்ப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களது படைப்பாற்றல் அதிகரிக்கும். புதிய யோசனைகள் வெளிப்படும். பணியிடத்தில் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் கிடைக்கும். பொருளாதாரம் உயரும். உங்கள் காதல் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். உங்கள் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 11
இந்த வாரத்தில் உங்களுக்கு பழைய கவலைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும். தொழிலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நிதி ஆதாயம் கிடைக்கும். ஆனால் எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எண்: 12