Vara Rasipalan In Tamil: ஆகஸ்ட் 10, 2025 முதல் ஆகஸ்ட் 16, 2025 வரை இருக்கக்கூடிய வார ராசி பலன்களை குறித்து தெரிந்துக்கொள்ளுவோம். இந்த வாரம் ரொம்ப முக்கியமான ஒரு மாற்றம் ஏற்படப்போகுது. இதன்காரணமாக பலருக்கு நன்மைகள் நடக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது புதன் வக்கர நிவர்த்தி அடைகிறார். இதனால் பல ராசிக்கு சந்தோஷமான நல்ல விசியங்கள் நடக்கவுள்ளது.
August Month Weekly Rasipalan: புதன் வக்கர நிவர்த்தி அடைவதால் 12 ராசிகளுக்கும் இந்த வாரம் நல்ல பலன்கள். சந்திரன் மூணு இடங்களை கடக்கிறார். இந்த வாரம் சந்திரன், ராகுவை சனியை கடந்து மேஷத்துக்கு போவார். எனவே 10 ஆம் தேதி இருந்து 16 ஆம் தேதி வரைக்கும் சந்திரன், ராகு சேர்க்கை, குரு, சுக்கிரன் சேர்க்கை என நான்கு ராசி சேர்க்கை நடக்கபோகிறது. அதுக்கப்புறம் சனி வக்கரம் அடைகிறார்.
1/13மேஷ லக்னம் சார்ந்த நபர்களுக்கு கவர்மெண்ட் உத்தியோகம் கிடைக்கும். யாருமே உங்களுக்கு எதிரி கிடையாது. எல்லாமே உங்களுக்கு நன்றாகவே நடக்கும். இந்த வாரம் முதல் ரெண்டு நாள் மட்டும் பிரண்ட்ஸ் ரிலேஷன்ஷிப்பில் கொஞ்சம் கவனமா இருங்கள். மத்தபடி எந்த பாதிப்பும் கிடையாது. நீங்க என்ன நினைக்கிறீங்களோ எல்லாமே சும்மா டக்கரா நடக்கும் எனச் சொல்லலாம்நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் வீரராகவ பெருமாள்.
2/13ரிஷப லக்னம் சார்ந்தவர்களுக்கு மன உறுதி மிக அதிகமாக இருக்கும். எதை செய்ய நினைக்கிறீங்களோ அதை செய்து முடிச்சே தீருவீர்கள். அண்ணன் தம்பி சண்டை எல்லாம் முடிந்து விடும். உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருந்தால் அதெல்லாம் சரியாகிவிடும். நீங்கள் நினைத்ததெல்லாம் எல்லாம் கரெக்டா டக்கு டக்குன்னு நடக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. ரொம்ப முக்கியமாக வேலையில் இருக்கக்கூடிய டென்ஷன் கிளியர் ஆகும். சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகக்கூடிய காலம். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் ஆதிநாராயண பெருமாள்.
3/13மிதுன லக்னம் சார்ந்த நபர்களுக்கு மிக முக்கியமான விஷயங்கள் இந்த ஒரு வாரம் நடக்காது. முதல் ரெண்டு நாட்கள் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் செய்யும் போது பார்த்து செல்லவும். ஹெல்த் மீது அக்கறை செலுத்துங்கள். அதேநேரம் இரண்டாம் இடத்தில் சூரியன், புதன் அமர்ந்திருப்பதால், கோல்டன் பீரியட் ஸ்டாட்ஸ் ஆம்கும். பெரிய அதிஷ்டம் உங்களுக்கு ஏற்படலாம். குடும்பத்தில் உங்க வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கவர்மெண்ட் சம்பந்தப்பட்ட வேலை வரும். நீங்கள் என்ன நினைக்கிறீங்களோ அது ஆட்டோமேட்டிக்கா நல்லபடியா நடக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கு.இந்த ஒரு வாரம் முக்கியமாக காசு, பணம் , பொருளாதாரத்தில் தான் நிம்மதி இருக்கும். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் கஜலட்சுமி.
4/13கடக லக்னம் சார்ந்த நபர்களுக்கு இந்த வாரம் யோகம் தான். நீங்கள் போய் ஒரு விஷயத்தை சொன்னா யாருமே நோ சொல்ல முடியாது. நீங்கள் என்ன பிளான் பண்றீங்களோ, அது தாராளமா நடக்கும். தள்ளி போற காரியங்கள் எல்லாம் டக்கு டக்குன்னு நடக்கும்.நிறைய பேருக்கு டாக்டர் ஆகும் வாய்ப்பு உள்ளது. செலவு கொஞ்சம் ஜாஸ்தியா பண்ணுவீங்க. தைரிய ரீதியா உபஜய ஸ்தானத்தில் மூணாம் இடத்தில் செவ்வாய் உட்கார்ந்து இருக்கற வரைக்கும் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். நினைத்த எல்லா காரியங்களும் பெரிய ஏற்றம் அபாரமான சந்தோஷம் கிடைக்கும். பெருமாள் மற்றும் அரங்கநாதனை வழிபாடு பண்ணினால் ஏற்றம் கிடைக்கும்.
5/13சிம்ம லக்னம் சார்ந்த நபர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம் இது. ஏனென்றால் விரயத்தில் சூரியன் உட்கார்ந்து இருப்பதால், அயல்நாட்டு பிரயாணம், வெளியூர் பிரயாணம், உடம்பு பாதிப்பு என நிறைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இனி சந்தோஷமாக இருக்கலாம். இண்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட பகுதிகள். இந்த இரண்ட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை வரலாம். உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் என்ன தெரியுமா? குரு, சுக்கிரன் இரண்டு பேருமே லாபஸ்தானத்தில் ஜிகு ஜிக்குன்னு உட்கார்ந்து இருப்பதால், காசு, பணம் தாராளமா வரும். அயோத்தி ராமபுரான் வழிபாடு ஏற்றத்தை கொடுக்கும்
6/13கன்னயா லக்னம் சார்ந்த நபர்களுக்கு செவ்வாய், சனி காம்பினேஷன் நிறைய பேருக்கு பதவிகளை கொடுக்கும். நிறைய பேச்சு வார்த்தைகளில் வெற்றி பெறவைக்கும். அது நமக்கே எதிர்பாராத ஒரு அதிர்ச்சியா இருக்கும். நிறைய பேருக்கு ப்ரொமோஷன், நிறைய பேருக்கு வெற்றி , நிறைய பேருக்கு பொருளாதார ஏற்றம், நினைத்த காரியங்கள் கைகூடுவது. அரசியலில் வெற்றி வாய்ப்புகள். பெரிய பெரிய ஆட்களுடன் தொடர்பு போன்ற பெரிய ஒரு விஷயங்கள் எல்லாம் ஈஸியா நடக்கும். அனைத்திலும் பெரிய ஏற்றமும், அபாரமான வெற்றியும் நினைத்த எல்லா டார்கெட்டும் முடிக்கக்கூடிய அற்புதமான நேரம் இந்த வாரம் முழுக்க இருக்கும். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் நரசிம்மர்.
7/13துலாம் லக்னம் சார்ந்த நபர்களுக்கு பிரயாணங்கள், ஆலய திருப்பணிகள், தர்மங்கள் மாதிரி நிறைய விஷயங்களை இந்த வாரம் நீங்கள் செய்வீர்கள். கவர்மெண்ட் போஸ்டிங் கிடைக்கும். இரண்டு நாள் மட்டும் ஹெல்த் மீது கவனம் செலுத்துங்கள். சந்திரன், ராகு, குரு, சுக்கரன் தேவை இல்லாத தலைவலி, டென்ஷன் கொடுக்கும். எனவே கவனமாக இருங்கள். மத்தபடி எந்த பாதிப்பும் கிடையாது. சூரிய நமஸ்காரம் இந்த வாரத்தில் கண்டிப்பாக செய்ய வேண்டும். வராத பணம், நடக்காத விஷயங்கள் அனைத்தும் சரியாக நடக்கும். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் வீரராகவ பெருமாள்.
8/13விருச்சிக லக்னம் சார்ந்த நபர்களுக்கு கண்டிப்பாக வெளியூர் பிரயாணம் 100% இந்த வாரத்தில் இருந்து அடுத்த ஒரு மாசத்துக்குள் நடந்தே தீரும். மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால், பொருளாதார ஏற்றம், யாராலும் செய்ய முடியாது என சொல்லக்கூடிய விசியங்களை சரியாக செய்து காட்டுவீர்கள். இந்த வாரம் முழுக்க சந்தோசமாக இருப்பீர்கள். வீட்தில் பெரியவங்க பிரச்சனை, சொத்து பிரச்சனை, டாக்குமெண்ட் பிரச்சனை என வரும். அனைத்தையும் மனநிறைவோது தாராளமாக தீர்ப்பீர்கள். உங்களுக்கு சாதகமாக பல விசியங்கள் நடக்கும்ன். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் பெருமாள்.
9/13தனுசு லக்னம் சார்ந்த நபர்களுக்கு இந்த வாரம் முழுவதும் உள்ளுணர்வுகள் பயங்கரமாக வேலை செய்யும். வேலையில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். கொஞ்சம் டென்ஷன் இருக்கும். ஆனால் உங்களை யாராலும் அடிச்சுக்க முடியாது. ஏனென்றால் குரு, சுக்கரன் இரண்டுமே உங்கள் பார்வையில் இருக்கிறார். யாரும் உங்களை கண்ட்ரோல் பண்ண முடியாது. நீங்கள் ஒரு விசியத்தை திட்டமிட்டு செய்தால் சரியாக முடியும். நீங்கள் என்ன நினைக்கிறீங்களோ, எது நினைக்கிறீங்களோ, எல்லாமே நல்லபடியா நடக்கும்.வீட்டில் பெரியவங்களுடைய சமாச்சாரத்தில மட்டும் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மத்தபடி எந்த பாதிப்பும் கிடையாது. நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் வெங்கட்ரமண சுவாமி.
10/13மகர லக்னம் சார்ந்தவர்களுக்கு, அதாவது சூரியனுடைய பார்வையும் புதனுடைய பார்வையும் இருப்பதால், ஞானத்தில் சிறந்தவராக இந்த வாரம் இருப்பீர்கள். சூரியன் புதன் இரண்டுமே ஸ்ட்ரைட்டா பார்ப்பதால் மகர ராசி லக்னத்தில் இருப்பவர்கள் பயப்பட மாட்டார்கள். உங்களால் செய்ய முடியாது என்கிற கான்செப்ட்டே கிடையாது. அந்த அளவுக்கு திவ்யமாக பல நல்ல காரியங்கள், விசித்திரமான விஷயங்கல் ஈசியா செய்ய முடியும். இது யாராலும் பண்ண முடியாது என்கிற விஷயங்கள் பண்ண முடியும். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் நாமகிரி அம்மன்.
11/13கும்ப லக்னம் சார்ந்த நபர்களுக்கு முதல் இரண்டு நாள் மட்டும் ஒரே அலைச்சல், டென்ஷன், தேவையில்லாமல் கன்பியூஷன், சண்டை என உங்களுக்கு கொஞ்சம் பிரச்னையை கொடுக்கலாம். ஹெல்த் நீது கவனமா இருக்க வேண்டும். வண்டி வாகனங்கள் போட்டும் போதும், ஹெல்த் மீது மட்டும் நீங்கல் கவனமாக இருந்தால் போதும். மத்தபடி எந்த பாதிப்பும் கிடையாது. நீங்க என்ன பிளான் பண்றீங்களோ அது டாப் கிளாஸ் நடக்கும். பேசும் ;போது கண்ட்ரோல் தேவை. எதையுமே பேச்சில் காட்டாதீர்கள். செயலில் காட்டுங்கல். கண்டிப்பா நல்லது நடக்கும். நரசிமரை வழிபட்டால் போதும் எந்த பாதிப்பும் கிடையாது.
12/13மீன லக்னம் சார்ந்தவர்களுக்கு சுப விரயங்கள் ஏற்படும். இவ்வளவு நாள் போராட்டத்திற்கு பிறகு நிறைய பேருக்கு நல்ல விஷயங்கல் நடக்கும். நீங்கள் எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்ய வேண்டும். மனக்கவலை, மனசஞ்சலம் கிளியர் ஆகும். அதிக பாதிப்பும் இல்லாமல் நிறைய ஏற்றமும் சுகத்தையும் பார்க்கக்கூடிய அற்புதமான ஒரு டைமிங். இந்த வாரம் எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் நீங்கள் நல்லாதான் இருப்பீர்கள். நீங்கள் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வம் ஆஞ்சனேயர்.
13/13இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், வாஸ்து சாஸ்திரங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE Tamil NEWS இதற்கு பொறுப்பேற்காது.