உடல் எடையை சட்டுனு குறைக்க இந்த 5 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க!

உடல் எடையை குறைக்க செய்ய வேண்டிய 5 விஷயங்கள் குறித்து பார்க்கலாம். 

ஜேமி ஷெர்மன் ஒரு எடை இழப்பு பயிற்சியாளர், 7 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவர் தனது உடல் இழப்பு பயணத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் செய்த முக்கியமான 5 விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம். 

1 /5

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். தேவையற்ற பேக்கிங் உணவுகள் போன்றவையை தவிர்த்து நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அதேபோல் அதிக சர்க்கரையை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

2 /5

தசையை வளர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும், இதனால் நீங்கள் ஓய்வில் இருக்கும்போது அதிக கலோரிகளை எரிப்பீர்கள். மேலும் உங்கள் உடற்பயிற்சிகள் நாள் முழுவதும் எரிக்கப்படும் கலோரிகளில் சுமார் 5 முதல்15 சதவீதம் மட்டுமே ஆகும். எனவே உங்கள் உடற்பயிற்சிகளின் மூலம் எரிக்கப்படும் கலோரிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது உங்களுக்கு முடிவுகளைத் தரப்போவதில்லை. 

3 /5

உங்கள் இலக்கை நீங்கள் அடையும் வரை பொருமையாக இருக்க வேண்டும். எந்த இலக்கை நீங்கள் நிர்ணயித்தாலும், அதனை அடைய நேரம் எடுக்கும் என்பதே உண்மை. எனவே இலக்கை அடையும் வரை காத்திருங்கள். இலக்கை அடைய முடியவில்லை என சோர்ந்து போய்விட வேண்டாம். தொடர்ந்து முயற்சியுங்கள்.

4 /5

உங்கள் எடை இழப்பு பயணம் சவால்கள் மற்றும் தடைகளுடன் வரப்போகிறது, அதற்கான ஆதரவு விலைமதிப்பற்றது. நீங்கள் தனியாக முயற்சிப்பதை விட இது உங்கள் இலக்கை 10 மடங்கு வேகமாக அடையும்.

5 /5

கொழுப்பு இழப்புக்கான உணவு பொதுவாக ஆரோக்கியாமான உணவை விட மிகவும் வித்தியாசமாகத் தோன்றலாம். நீங்கள் இலக்கை அடைய விரும்பினால், கொழுப்பு இழப்புத் திட்டத்தை வைத்திருக்கவும், அதைச் செயல்படுத்துவதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளவும்.