எடை இழப்பு தவறுகள்: எடையை குறைக்க நினைத்து நாம் செய்யும் முயற்சிகளில் பல தவறுகளை செய்து வருகிறோம். இதனால் எவ்வளவு முயற்சித்தாலும் எடை குறைக்க வாய்ப்பில்லை.
Weight Loss Mistakes: நம்மில் பலர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, உணவு முறையில் கட்டுப்பாடு என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது உண்டு. ஆனால் எடை குறைந்தபாடு இல்லை. இதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளில் செய்யும் தவறுகள்தான் காரணம். அது என்ன? எப்படி அதை சரி செய்து கொள்வது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
கலோரிகளை வெகுவாக குறைப்பது விரைவான எடை குறைப்புக்கு வழிவகுக்கும் என பலரும் நம்புகின்றனர். ஆனால் மிகக் குறைந்த கலோரிகளை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. இதனால் உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக சேமித்து வைக்கிறது. சீரான உணவுகளை சீரான இடைவெளியில் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. மேலும், தசை இழப்பை தடுக்கிறது.
தசை பழுது மற்றும் கொழுப்பை குறைப்பதற்கு புரதம் அவசியம். புரதம் குறைவாக உள்ள உணவு தசை இழப்பு மற்றும் பசி அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. இது அதிகமாக சாப்பிட வைக்கும். உடல் எடையை குறைப்பது அவசியம்தான் ஆனால் புரத்ததை முழுமையாக தவிர்ப்பது நல்லது அல்ல.
உடல் எடையை குறைக்கும் அவசரத்தில் நாம் காலை உணவை தவிர்கிறோம். அப்படி செய்வது உடல் எடையை குறைக்காது. மாறாக உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். காலை உணவை எடுத்துக்கொள்வது அவசியம். இது அன்றைய தினத்தை முழு வேலையையும் சோர்வடையாமல் செய்யலாம். எடையை குறைப்பதற்கு எந்த வேளை உணவையும் தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் மறைக்கப்பட்ட சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் போன்றவற்றை உள்ளன. இது எடை குறைப்பிற்கு பதிலாக எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.
வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமானத்தில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. எடை குறைப்பை அதிகரிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)