Anushka Sharma Weight Loss Secret: நடிகை அனுஷ்கா 37 வயதிலும் ரொம்ப ஃபிட்டாக இருக்கிறார். இவரின் பிட்னஸ் டயட் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. இவர் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு வருகிறாராம்.
1/7உடல் பருமனால் இன்றைய காலத்தில் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் பருமானால் கஷ்டப்பட்டு வருகின்றனர். உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று நோக்கில் இருந்து வருகிறது. இதற்கான பல்வேறு உடற்பயிற்சிகள் போன்றவற்றை முயற்சித்து வருகின்றனர்.
2/7இந்த நிலையில், நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு 37 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் மிகவும் தன்னை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இவரின் டயட் சீக்ரெட் குறித்து பார்ப்போம். அதாவது, விரோத் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு வருவதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
3/7தனது டயட் குறித்து அவர் பேசுகையில், அனுஷ்கா ஷர்மா மோனோட்ரோபிக் டயட்டை பின்பற்றி வருவதாக தெரிவித்தார். மோனோ டயட் என்பது ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான உணவை மட்டும் சாப்பிட்டு வருவது தான் மோனோ டயட் என்று அழைக்கப்படுகிறது. மோனோ டயட்டை பின்பற்றும் அனுஷ்கா சர்மா, 6 மாதங்கள் இட்லி, சாம்பார் மட்டுமே சாப்பிட்டதாக அவர் பகிர்ந்துள்ளார்.
4/7இதுதான் தனது உடல் எடையை குறைத்ததாக கூறினார். மேலும், தனது செரிமானத்தை சிறப்பாக வைத்ததாகவும் அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளது. இதுபோன்று மூன்று வேளையும் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டதாலே தனது உடல் எடை குறைந்ததாக தெரிவித்தார்.
5/7மேலும், இட்லி போன்ற நொதிக்கவைக்கப்பட்ட உணவுகள் நன்மை தரும் மற்றும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் சாம்பாரில் உள்ள பருப்பு வகைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் வழங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினபார். இது உடலுக்கு மட்டுமில்லாமல், சரும ஆரோக்கியத்திற்கு நல்லது என்றார்.
6/7இதுகுறித்து மருத்துவர் பால் கூட விளக்கம் அளித்தள்ளார். அவர் கூறுகையில், மோனா டயட் மூலம் தொடர்ந்து ஒரே உணவைச் சாப்பிடுவது இயற்கையாகவே உணவு அளவுகளை ஒழுங்கப்படுத்த உதவும். திடீரென துரித உணவுகளை சாப்பிடுவதையோ அல்லது அதிகமாக சாப்பிடுவதையும் கட்டுப்படுத்தும் என்று கூறினார்.
7/7(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)