வெயிட் லாஸ் செய்ய..சியா விதையை ‘இந்த’ பொருளோடு சாப்பிட வேண்டும்!!

Written ByYuvashree
Published: Apr 23, 2025, 03:30 PM IST|Updated: Apr 23, 2025, 04:02 PM IST

Weight Loss Tips Chia Seeds : சியா விதைகளை நாம் ஹெல்தியாக பல வகைகளில் சாப்பிடலாம். வெயிட் லாஸுக்கும் இதனை பயன்படுத்தலாம். அதனை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

Weight Loss Tips Chia Seeds : வெயிட் லாஸ் செய்ய வேண்டுமென நினைப்பவர்களுக்கு, ராசியான உணவாகிப்போய் விட்டது சியா விதைகள். இவற்றில் இருக்கும் சில சத்துகள், எடை இழப்பிற்கு காரணமாக இருக்கின்றன. இதனை சில உணவுகளோடு சேர்த்து சாப்பிடுகையில், கண்டிப்பாக எடை இழப்பு ஏற்படும். அப்படி சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

சியா விதைகள்1/7

சியா விதைகள்

குட்டியாக இருக்கும் சியா விதைகளில், பல பயன்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, வெயிட் லாஸ். இதில், ஃபைபர், புரதம் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ஆகியவை இருப்பதால் கண்டிப்பாக இவற்றை சாப்பிடும் போது உடல் எடை குறையலாம் என கூறப்படுகிறது

தயிர்2/7

தயிர்

சியா விதைகளை தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். தயிரில் இருக்கும் புரதம், ப்ரோபயோடிக்ஸ் மற்றும் கால்சிய சத்துக்கள் உடலுக்கு வலு தரும். அதோடு, இரண்டையும் சேர்த்து சாப்பிடுகையில், வயிறு முழுமையுடன் உணர்வதோடு மட்டுமன்றி பசி உணர்வையும் கட்டுப்படுத்தும்.

ஓட்ஸ்3/7

ஓட்ஸ்

ஓட்ஸில், ஃபைபர் மற்றும் மெதுவாக செரிமானம் ஆகும் கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது. இது, வெகு நேரம் பசி ஏற்பட விடாமல் தடுக்குமாம். இதனுடன் வேண்டுமானால் சூர்யகாந்தி விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.

இளநீர்4/7

இளநீர்

சியா விதைகளை இளநீருடனும் சேர்த்து சாப்பிடலாம். 15 நிமிடங்கள் இளநீரில் ஊற வைத்து பின்பு, குடித்தால் செரிமானத்திற்கு உதவுமாம். இதனால், உடல் எடை ஏறாமல் தடுக்கலாம்.

நட்ஸ்5/7

நட்ஸ்

சியா விதைகளை நட்ஸுடன் சேர்த்து சாப்பிடலா. இதனால் உடலுக்கு புரதம் கிடைப்பதோடு, வெயிட் மேனேஜ் செய்யவும் உதவும்.

பழங்கள்6/7

பழங்கள்

சியா விதைகளை, பழங்களோடும் சேர்த்து சாப்பிடலாம். இதனை பழ ஜூஸ் ஆக குடிக்கலாம். இதனை உங்களின் வெயிட் லாஸ் டயட்டிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு7/7

பொறுப்பு துறப்பு

இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தரவுகளை வைத்து எழுதப்பட்டவை. இதற்கு ஜீ மீடியா (ZEE TAMIL) பொறுப்பேற்காது.