பருமன் குறைய... தொப்பை கரைய.... இந்த சிம்பிளான ஆரோக்கிய பழக்கங்கள் கை கொடுக்கும்

உடல் எடை குறைய, தொப்பை கரைய மிகக் கடுமையான டயட் முறையோ, கடுமையான உடற்பயிற்சியோ தேவையில்லை. எளிமையான சில பழக்கங்களை கடைப்பிடித்தாலே உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

உடல் எடை கட்டுக்குள் இருந்தால், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஏனென்றால் பல சமயங்களில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உடல் பருமனுமே நமது ஆரோக்கியம் பாதிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

1 /9

உடல் பருமனை குறைக்கவும், பிட்டாக இருக்கவும், பணத்தை அள்ளி இறைத்து டயட் முறையை பின்பற்றுவதன் மூலம், உடல் எடை எளிதாக குறைந்தாலும், பின்னர் அதை விட்டு விட்டால் அதே அளவு வேகத்தில் உடல் பருமன் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.  

2 /9

உடல் எடை குறைய, டயட் முறைக்கு பதிலாக, ஆரோக்கியமான சமச்சீரான அனைத்து சத்துக்களும் நிறைந்த காலை உணவுடன், ஒரு நாளை தொடங்குவது சிறந்த தொடக்கமாக இருக்கும். இதனால் நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்திருக்கும். சோர்வு என்பதே இருக்காது.  

3 /9

உணவை நன்றாக மென்று சாப்பிடுவதால், உணவுடன் உமிழ்நீர் நன்றாக கலந்து, செரிமானம் சிறப்பாக இருக்கும். அதோடு நன்றாக மென்று சாப்பிடுவதால், வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு அடிக்கடி பசி எடுக்காது. ஏனென்றால் வயிறு நிறைந்து விட்டது என்ற செய்தி மூளைக்கு கிடைக்க 20 நிமிடங்கள் தேவைப்படும்.

4 /9

அசைவ உணவு ஆரோக்கியம் நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தினமும் அசைவம் சாப்பிடுவது நல்லதல்ல. அசைவ உணவுகளை வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற வகையில் கடைபிடிப்பதால், கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அதிகமாகாமல் இருக்கும்.

5 /9

உடல் பருமன் குறைய, மிகக் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை தேர்ந்தெடுப்பதால், எடை இழக்கும் முயற்சி மிகவும் எளிதாகும். பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த உணவுகளுக்கு உண்டு.

6 /9

சிலருக்கு சாப்பிடாமல் இருந்தால் உடல் இளைக்கும் என்ற எண்ணம் உண்டு. இது மிக மிக தவறானது. சாப்பிடாமல் இருப்பதால், பசி மிகவும் அதிகரித்து, நாம் தேவைக்கு அதிகமாக சாப்பிடும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் சாப்பாட்டை தவிர்ப்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல.  

7 /9

நீங்கள் சாப்பிடுவதற்காக பயன்படுத்தும் தட்டின் அளவு சிறியதாக இருப்பது நல்லது. சிறிய தட்டை தேர்ந்தெடுத்து, அதை நிரப்பி சாப்பிடும் போது, நாம் நிறைய சாப்பிட்டோம் என்று எண்ணம் ஏற்படும். இது வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும். அதிக உணவை எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

8 /9

தினமும் முடியாவிட்டாலும், வாரத்திற்கு ஐந்து நாட்கள் ஆவது நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி தேவை. இவை உடல் எடையை கட்டுக்குள் வைப்பதோடு, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடலில் ரத்த ஓட்டம் சீராகி மூளையும் சுறுசுறுப்பாக இருக்கும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.