47 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ஜோதிகா! அவரே பகிர்ந்த சூப்பர் டிப்ஸ்.. இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

Jyothika Fitness Secret: நடிகை ஜோதிகா 47 வயதிலும்  ஃபிட்டாக இருந்து வருகிறார். இதற்கு காரணம் அவரின் உடற்பயிற்சிகள் தான். எனவே, அவர் என்னென்ன உடற்பயிற்சிகளை செய்து பிட்டாக இருக்கிறார் என்பது குறித்து பார்ப்போம்.

1 /7

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஜிம் செல்வது, டயட் பின்பற்றுவது போன்றவற்றை செய்து வருகின்றனர். ஆனால், உடல் எடையை குறைப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. 

2 /7

ஆனால், 47 வயதிலும் நடிகை ஜோதிகா ஃபிட்டாக இருந்து வருகிறார். அன்றாட வாழ்க்கையில் அவர் பின்பற்றும் டயர் மற்றும் உடற்பயிற்சிகள் தான் அவர் ஃபிட்டாக இருப்பதற்கு காரணமாக இருக்கிறது. அவர் குறிப்பாக, வலிமைக்கான பயிற்சிகளை செய்து வருகிறது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.   

3 /7

அதாவது, goblet squat, knee pull ins with rods, kettlebell overhead, Wall sit Ketlebell And Leg Lifts, V Sit, Doube Heavy Rope Exercise போன்றவற்றை நடிகை ஜோதிகா செய்து வருகிறார். இதில் Doube Heavy Rope Exercise  என்பது இரண்டு கயிறுகளை மேலும், கீழும் தூக்குவது ஆகும்.  இந்த பயிற்சி உங்கள் கை, கால்களை வலுவாக வைக்க உதவுகிறது. வெறும் 10 நிமிடத்தில் உங்கள் கை, தோள்பட்டையில் உள்ள கொழுப்புகளை கரைக்கும்.  

4 /7

 V Sit என்பது பின்பக்கம் ஒரு தடுப்பில் கைகளை வைத்து balance செய்து, உங்கள் கால்களை உயர்த்தி சுவற்றின் மீது வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் இடுப்பு பகுதி சுற்றியுள்ள கொழுப்புகள் கரையக் கூடும். உடலை v வடிவத்தில் சமநிலைப்படுத்துவது மூளைக்கும் தசைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்தும்.  

5 /7

Wall sit Ketlebell And Leg Lifts என்பது சுவற்றில் சாய்ந்தபடி, எந்த ஒரு நாற்காலி எதுவும் இல்லாமல், ஒன்றை காலை தூக்கிக் கொண்டு அமருவது தான். இந்த பயிற்சி உங்கள் கால்களை வலிமையாக வைக்க உதவும். அதே நேரத்தில் ஜோதிகா கையில் அதிக எடையுள்ள பந்து இருக்கும். இது உடலில் உள்ள தசைகளை வலுப்படுத்த உதவும். மேலும், உங்கள் கால்கள், கைகள் வலிமையாக இருக்கும்.   

6 /7

kettlebell overhead என்பது  எடையை தலைக்கு மேல் கொண்டு சென்று கீழே இறக்க வேண்டும். இது உங்கள் தோள்பட்டை நிலைத்தன்மையை அதிகரிக்கும். அதோடு, உங்கள தோள், கைகள், முதுகு, இடுப்பு தசைகளை ஒரே நேரத்தில் வலுப்படுத்திக் கொள்ளும் சிறப்பான உடற்பயிற்சி இது. இதனை தினமும் 10 முதல் 20 முறை செய்யலாம்.

7 /7

Goblet squat என்பது டம்பிள்ளை மார்பு உயர்த்திற்கு பிடித்துக் கொண்டு ஸ்குவாட்ஸ் போட வேண்டும். இதில் ஜோதிகா 70 கிலோ எடையிலான டம்பிள்ளில் உடற்பயிற்சி கலக்கியுள்ளார். இந்த உடற்பயிற்சி உங்கள் கால்கள், தொடைகள், உடலின் மையப்பகுதிக்கு வலிமையை கொடுக்கும். இப்படியாக ஜோதிகா தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார்.