EPS Pension: PF உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 7 வகையான இபிஎஸ் ஓய்வூதியம்... முழு லிஸ்ட் இதோ

EPFO Monthly Pension: இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறீர்களா? அப்படி என்றால் உங்களுக்க்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய ஒரு முக்கிய செய்தியை இங்கே காணலாம்.

EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, சமூகப் பாதுகாப்புத் திட்டமாக, ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டத்தை (Employees Pension Scheme) நடத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், தனியார் துறையில் உள்ள தொழிலாளர்கள் 58 வயதை எட்டியவுடன் இபிஎஸ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். இபிஎஸ் -இன் கீழ் 7 வகையான ஓய்வூதியங்கள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.

1 /11

இபிஎஃப் -இல் மாதா மாதம் பங்களிக்கும் அனைவருக்கும் பணி ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் கிடைக்கிறது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், இபிஎஃப் -இல்  எவ்வளவு ஓய்வூதிய வகைகள் இருக்கிறது என்பது பலருக்கு தெரியாது. இபிஎஃப் -இல் 7 வகையான ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன. இவை பிஎஃப் உறுப்பினரை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

2 /11

சூப்பரானுவேஷன் ஓய்வூதியத்தின் பலன் 58 வயது நிறைவடைந்தவுடன் கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகு, இபிஎஃப் சந்தாதாரர்கள் பொதுவாக 58 வயதில் இபிஎஸ் ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.

3 /11

வழக்கமாக EPFO ​​58 வயதிலிருந்து இபிஎஸ் ஓய்வூதியத்தை வழங்குகிறது. ஆனால் ஒரு உறுப்பினர் ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்து 58 வயதிற்கு முன்பே ஓய்வு பெற்றால், 50 வயதிற்குப் பிறகும் அவர் முன்கூட்டியே ஓய்வூதியம் பெறலாம். ஆனால் எர்ளி ஓய்வூதியத்தில், EPFO ​​உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறது.

4 /11

ஒரு EPFO ​​உறுப்பினர் அகால மரணம் அடைந்தால், இறந்த உறுப்பினரின் வாழ்க்கைத் துணைவருக்கு EPFO ​​ஒவ்வொரு மாதமும் விதவை ஓய்வூதியத்தை வழங்குகிறது.

5 /11

இந்த ஓய்வூதியம் இறந்த உறுப்பினரின் குழந்தைகளுக்கானது. EPS 95 இன் கீழ், இறந்த உறுப்பினரின் இரண்டு குழந்தைகளுக்கு 25 வயது வரை மாதாந்திர ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.

6 /11

ஒரு EPFO ​​உறுப்பினர் மற்றும் அவரது மனைவி இருவரும் இறந்துவிட்டால், அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு அனாதை ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.

7 /11

EPS விதிகளின் கீழ், தங்கள் சேவையின் போது நிரந்தரமாகவோ அல்லது முழுமையாகவோ ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வயது மற்றும் ஓய்வூதிய நிதிக்கு 10 ஆண்டுகளுக்கு பங்களிப்பு செய்வதற்கான நிபந்தனைகள் ஆகியவை பொருந்தாது. அதாவது ஒரு உறுப்பினர் இரண்டு வருடங்கள் EPS-க்கு பங்களிப்பு செய்திருந்தாலும், அவர் இந்த ஓய்வூதியத்தைப் பெற உரிமையுடையவர் ஆகிறார்.

8 /11

EPFO உறுப்பினருக்கு மனைவி அல்லது குழந்தை இல்லையென்றால், EPFO ​​உறுப்பினர் இறந்த பிறகு, இந்த ஓய்வூதியம் அவர் பரிந்துரைத்த நாமினிக்கு வழங்கப்படும். EPFO உறுப்பினர் தனது தாய் மற்றும் தந்தை இருவரையும் நாமினிகளாக நியமித்திருந்தால், அத்தகைய சூழ்நிலையில் இருவருக்கும் நிலையான பங்கின்படி ஓய்வூதியத் தொகை கிடைக்கும். வேறு யாராவது நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தால், முழுத் தொகையும் நாமினிக்கு வழங்கப்படும்.

9 /11

நீண்ட சேவை கொண்ட இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) அதிக ஓய்வூதியத்தை பெறலாம். அதிக ஆண்டுகள் பணியாற்றினால், ஊழியர்களின் ஓய்வூதிய சேவை மற்றும் ஓய்வூதியத் தொகை அதற்கு ஏற்றவாறு அதிகமாக இருக்கும்.

10 /11

இபிஎஃப் உறுப்பினர்கள் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. எனினும், இதில் ஒரு பங்கு இபிஎஎஃப் கணக்கிற்கு (EPF Account) ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிற்கும் செல்கிறது.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. EPF குறித்த  சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.