EPFO Monthly Pension: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு பல வகையான ஓய்வூதியங்கள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
EPS Pension: இபிஎஃப் கணக்கில் 10 ஆண்டுகள் பங்களித்தால், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற உங்களுக்கு உரிமை உண்டு. இந்த ஓய்வூதியம் உங்களுக்கு 58 வயது முதல் வழங்கப்படுகிறது. இது அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிந்த பொதுவான விதி. ஆனால் EPFO வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான ஓய்வூதியங்களை வழங்குகிறது. சில சூழ்நிலைகளில், EPFO உறுப்பினரின் குடும்பத்திற்கும் ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. ஆனால் இதுபற்றி பலருக்கும் தெரியாது. EPFO மூலம் அளிக்கப்படும் பல்வேறு வகையான ஓய்வூதியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். பிஎஃப் உறுப்பினர்களுக்கு பணி ஓய்வுக்கு பிறகு மொத்த தொகை கிடைப்பதோடு, இபிஎஸ் திட்டத்தின் மூலம் மாத ஓய்வூதியமும் கிடைக்கின்றது. இபிஎஸ் தொகைக்கு நிறுவனம் பங்களிக்கின்றது.
10 ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில், 58 வயதிற்குப் பிறகு, இபிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திலிருந்து ஓய்வூதியம் (Pension) கிடைக்கும். இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) அவரவர் நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப பல விதமான ஓய்வூதியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஓய்வூதியங்கள் பிஎஃப் உறுப்பினருக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்கும் பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பு அளிக்கின்றன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
சூப்பரானுவேஷன், அதாவது பணி ஓய்வு ஓய்வூதியம் என்பது உங்களுக்கு 58 வயது ஆன பிறகு EPFO ஆல் வழங்கப்படும் ஓய்வூதியமாகும். ஓய்வூதிய நிதிக்கு உங்கள் மொத்த பங்களிப்பைப் பொறுத்து ஓய்வூதியம் வழங்கப்படும். நீங்கள் விரும்பினால், 58 ஆண்டுகளுக்குப் பிறகு 60 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் பெறலாம். அத்தகைய சூழ்நிலையில், EPFO அதன் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அதிகரிக்கிறது.
பொதுவாக EPFO 58 வயதிலிருந்து ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால் ஒரு உறுப்பினர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்து, 58 வயதிற்கு முன்னரே அவர் ஓய்வூதியம் பெற விரும்பினால், அவர் 50 வயதிற்குப் பிறகு அதைக் கோரலாம். எர்லி ஓய்வூதியத்திற்கான ஏற்பாடுகளையும் EPFO செய்துள்ளது. இருப்பினும், முன்கூட்டிய ஓய்வூதியத்தில், EPFO உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டுக்கும் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதாவது, ஒருவருக்கு 58 வயதில் 10,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் என்றால், அவர் 57 வயதில் க்ளைம் செய்தால், அவருக்கு 4% குறைக்கப்படும், அதாவது 9,600 ரூபாய் கிடைக்கும், 56 வயதில் க்ளைம் செய்தால், ஓய்வூதியம் 8% குறைக்கப்படும், அதாவது ரூ.9,200 கிடைக்கும்.
EPFO சந்தாதாரர் இறந்த பிறகு, அவரது மனைவி மற்றும் 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. மூன்றாவது குழந்தைக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால் முதல் குழந்தைக்கு 25 வயதாகி, ஓய்வூதியம் நிறுத்தப்படும் போது மூன்றாவது குழந்தைக்கு ஓய்வூதியம் கிடைக்கும். EPFO சந்தாதாரர் இறந்தாலும் 10 வருட ஓய்வூதிய விதி பொருந்தாது. ஒரு சந்தாதாரர் ஒரு வருடம் பங்களிப்பு செய்திருந்தாலும் கூட, அவர் இறந்தவுடன் அவரது விதவை மற்றும் குழந்தைகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
சேவையின் போது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு, வயது மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஓய்வூதிய நிதிக்கு பங்களிப்பு போன்ற நிபந்தனைகள் பொருந்தாது. ஒரு சந்தாதாரர் இரண்டு ஆண்டுகள் EPS க்கு பங்களித்திருந்தாலும், அவர் இந்த ஓய்வூதியத்திற்கு தகுதியானவர்.
EPFO சந்தாதாரர் இறந்தவுடன் அவரது மனைவியும் இறந்துவிட்டால், 25 வயதுக்குட்பட்ட அவரது இரண்டு குழந்தைகளுக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலைக்கு EPFO அனாதை ஓய்வூதியத்திற்கான ஏற்பாடு உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு 25 வயது ஆகும் வரை மட்டுமே இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
EPFO உறுப்பினருக்கு வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகள் இல்லாத பட்சத்தில், EPFO உறுப்பினர் இறந்தவுடன், அவரால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு EPFO உறுப்பினர் தனது தாய் மற்றும் தந்தை இருவரையும் நாமினி ஆக்கியிருந்தால், அத்தகைய சூழ்நிலையில் இருவரும் நிலையான பங்கின்படி ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள். யாராவது ஒருவரை நாமினி ஆக்கினால், நாமினி முழுத் தொகையையும் பெறுவார்.
EPFO இன் கீழ், ஒரு EPFO சந்தாதாரர் இறந்தால், அவரைச் சார்ந்திருக்கும் தந்தை ஓய்வூதியம் பெற தகுதியுடையவராகக் கருதப்படுவார். தந்தை இறந்தால், சந்தாதாரரின் தாய்க்கு ஓய்வூதியம் கிடைக்கும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதற்கு படிவம் 10டி பூர்த்தி செய்ய வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. EPFO குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.