இந்தியா-பாகிஸ்தான் போர்: இதனால் சீனாவுக்கு என்ன பாதிப்பு வரும்?

Dangers China Might Face India Pakistan War : இந்தியா-பாகிஸ்தான் இடையே கடுமையான போர் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இதனால் சீனாவிற்கு என்ன ஆபத்து வரும் தெரியுமா?

Dangers China Might Face India Pakistan War : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் எனும் பெயரில், இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலகநாடுகளும் தங்களின் கருத்துகளை கூறி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவும் போரைத்தொடர்ந்தால் இந்தியாவிற்கு என்ன பிரச்சனை வரும் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. 

1 /7

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்ரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது. ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது.

2 /7

தற்போது இரு நாட்டு எல்லைகளில்ம் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. இதற்கு உலக நாடுகள் பல தங்களின் கருத்துகளை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்கா, இதில் தங்களால் தலையிட முடியாது என்று கூறியிருக்கிறது. 

3 /7

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய வான்வழி தாக்குதல் வருந்ததக்கவையாக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்திருந்தது. 

4 /7

இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள் என்பதை கூறிய சீனா, அவை தங்களின் அண்டை நாடுகளும்தான் என்று கூறியிருக்கிறது. இதனால், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் சீனா எதிர்ப்பதாக தெரிவித்திருந்தது.

5 /7

தங்களின் இரு அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் அமைதியை பேண வேண்டும் என்றும், நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.   

6 /7

பாகிஸ்தான் இந்த போரால் நிலையற்ற தன்மையை அடைவதை சீனா ஒரு போதும் விரும்பாது என்று கூறப்படுகிறது. இதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. 2005ல் இருந்து 2024 வரை பாகிஸ்ஹானில் சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலரை சீனா முதலீடு செய்திருக்கிறது. அது மட்டுமன்றி, சீனா-பாகிஸ்தானின் பொருளாதார வழித்தடமான CPEC-ன் திட்டத்தில் சீனா பெரும் முதலீட்டை செய்திருக்கிறது.

7 /7

இதனால், மத்திய ஆசியாவை சாலை வழியே இணைக்கும் சீனாவின் கனவு திட்டம் தகர்ந்து போகும் வாய்ப்புள்ளதாம். இதனால்தான், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இணக்கமான சூழல் வர வேண்டுமென சீனா விரும்புகிறதாம்.