Cat Crossing Path Astrology: வெளியில் செல்லும்போது பூனை குறுக்கே சென்றால் அசுபமாக எதாவது நடக்கும் என நம்பப்படும் நிலையில், இது உண்மையா என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஜோதிட ரீதியாக சில விஷயங்களை இன்னுமம் பலரும் நம்பி வருகின்றனர். வெளியே செல்லும் போது, கால் இடறினால், கெட்ட சகுனம், பூனை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம் என்பது போன்று பல விஷயங்களை நம்பி வருகின்றனர்.
ஆனால், இதெல்லாம் உண்மையா என்ற கேள்வியும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாலையில் நடந்து செல்லும் போது திடீரென ஒரு பூனை குறுக்கே வந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது. பின்னர், உடனடியாக நின்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் செல்கின்றனர்.
ஏனென்றால், பூனைகள் சில சமயங்களில் அசுபமாக கருதப்படுகிறது. அதில் குறிப்பாக கருப்பு பூஜை குறுக்கே வந்தால், உடனடியாக பலரும் உடனே நின்றுவிட்டு, சில நேரம் கழித்தும் அவர்கள் செல்கிறார்கள். இப்படியாக சிலர் நம்பியிருக்கும் நிலையில், உண்மையிலேயே பூஜை குறுக்கே வந்தால் கெட்ட சகுனமான என்பது குறித்து பார்ப்போம்.
அதாவது, ஜோதிட ரீதியாக பார்த்தால், ராகு கிரகத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. வெளியில் செல்லும் பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால், அது மோசமான அறிகுறி என்று கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அது வலமிருந்து இடமாக நகர்நத்ல், அது மங்களகரமானதாகவும் கருதுகின்றனர். நீங்கள் செய்யப் போகும் வேலை வெற்றிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், அறிவியில் காரணங்களின்படி, முந்தைய காலத்தில் மாட்டு வண்டிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அப்போது, மாடுகளுக்கு முன்னால் பூனை சென்றால், மாடுகள் அமைதியாக இருக்காதாம். இதனால், மாடுகளை அமைதிப்படுத்த அதனை ஓட்டுபவர்கள் வாகனத்தை சிறிது நேரம் நிறுத்துவார்களாம்.
அன்றில் இருந்து இன்று வரை வாகனத்தின் முன்போ, நடந்து சென்றாலோ உடனே ஒருநிமிடம் நின்று செல்வது வழக்கமாகிவிட்டது. இந்த வழக்கம் நாளடைவில் மூட நம்பிக்கையாகவே மாறிவிட்டது. மேலும், சாலையை கடந்ததும் பூஜை சிறிது நேரம் நின்றால், வாகனம் மீது மோதும் வாய்ப்புள்ளது.
இதை தடுக்கவே, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்துகின்றனர். இதுகவும் ஒரு காரணமாக செல்லப்படுகிறது. எனவே, பூஜை குறுக்கே செல்வது கெட்ட சகுனம் என்பது எதுவும் இல்லை என்பதை அறிவியில் காரணங்கள் சொல்லுகின்றன. ஜோதிட ரீதியாக பார்த்தால், அது கெட்ட சகுனமாகவே பார்க்கப்படுகிறது. (இந்த கட்டுறை ஆன்மீக அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது. இதற்கு எந்தஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. அதனால், இதற்கு ஜீ தமிழ் பொறுப்பேற்காது)