மாணவர்களே, கட் ஆப் மதிப்பெண் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Cut off mark, Engineering Admission : 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களே, கட் ஆப் மதிப்பெண் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Engineering Cut off mark Tamilnadu : 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த மற்றும் பிரபலமாக இருக்கும் கல்லூரிகளில் சேர விரும்புகின்றனர். ஆனால், பொறியியல் கலந்தாய்வில் கட்- ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தரவரிசை வெளியிடப்படும்.
அதை தொடர்ந்து, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விருப்பமான இடங்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் விரும்பும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
பொறியியல் படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வின் மாணவர்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படை யில் கட்-ஆப் கணக்கிடப்படும். கணிதத்தில் 100க்கு எடுத்த மதிப்பெண்கள் அப்படியே எடுத்துகொள்ளப்படும்.
இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 100க்கு கொண்டுவரப்படும். தொடர்ந்து, கணிதம், மற்றும் இரண்டு பாடங்கள் 100க்கு பெற்ற மதிப்பெண்கள் சேர்ந்தால் வருவதே கட்-ஆப் மதிப்பெண்கள்.
உதாரணத்திற்கு, கணிதம் - 98, இயற்பியல் 89, வேதியியல் 68 என்றால், இயற்பியல் + வேதியியல் மதிப்பெண் கன் சேர்ந்து 100க்கு எடுத்துகொண்டால் 88.5 ஆகும். இதனுடன் கணித மதிப்பெண்கள் சேர்ந்தால் மொத்தம் 185.5 ஆகும். இதுவே கட்-ஆப் மதிப்பெண்கள்.
இந்த முறைகளின்படியே கட்-ஆப் தேர்வு செய்யப்படுகிறது. கோர் படிப்பு னை தவிர்த்து இதர படிப்புகளுக்கு குறைவான கட்-ஆப் போதுமானதாக கருதப்படுகிறது.
எனவே மாணவர்கள் பிற துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளையும் தெரிந்துகொண்டு எதிர்காலத்தில் நல்ல ஊதியங்களை பெற சரியான படிப்பை தேர்வு செய்யுமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.